வீட்டில் வாஸ்து குறைபாடுகள் இருந்தால் அதை வாஸ்து தோஷம் என்று சொல்கிறோம். அதை சரிபடுத்தாமல் இருந்தால் வீட்டில் இருப்பவர்களுக்கு சிரமம் ஏற்படலாம். சில சமயங்களில் வீட்டில் வாஸ்து சரியில்லை என்றால், அதை வாடைகைக்கு விட்டு விடுவார்கள். ஆனால் வாஸ்து குறைகள் இருந்தால் வாடகைக்கு இருப்பவர்களின் வாழ்க்கையில் நிம்மதி இல்லாமல் போகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வீட்டின் தென்மேற்கு பகுதியில் இரும்பு பெட்டி, பீரோ வைப்பதாக இருந்தால், மூலையை விட்டு மேற்கு, தெற்கு சுவர்களில் முழுவதும் வார்டு ரோப் வைக்கலாம். தென்மேற்கு மூலையில் இரும்பு பெட்டி அல்லது இரும்பு பீரோ வைப்பது நல்லது. 
இரும்பு என்பது சனி பகவானின் வரம்புக்குள் வருவது. எனவே இரும்பு பெட்டியில் இருந்து பணம் எடுத்து செய்தால், செலவு செய்வது குறையும், பணமும் அதிக அளவில் சேரும். அதனால் தான், நகைக்கடைகளிலும், பெரிய நிறுவனங்களிலும், கோவில்களிலும் பணம் மற்றும் நகைகள் வைப்பதற்கு இரும்பு பெட்டி பயன்படுத்திய வழக்கத்தை பலரும் தொடர்ந்து வருகின்றனர்.


எந்த ரூம்மில் அமைத்தாலும், கிழக்கு மற்றும் வடக்கு சுவர்களில் இல்லாமல், தெற்கு மற்றும் மேற்கு சுவர்களில் மட்டுமே அமைக்க வேண்டும். மரத்தினால் அல்லது சிமெண்ட் ஸ்லாப்புகள் வைத்து கட்டப்படும் கப்போர்டு அல்லது  வார்ட்ரோப் (wardrobe) அமைக்கும் போது சில விதிகளை நினைவில் கொள்ள வேண்டும்.


Also Read | தன்தேராஸ் கொண்டாடப்படும் காரணம்!


தெற்கு அல்லது மேற்கு சுவர்களில் வார்டு ரோப் அமைக்கும் போது, தென்மேற்கு மூலையில் ஆரம்பித்து அமைக்க வேண்டும்.முழு சுவரிலும் அமைக்கலாம், அல்லது மேற்கில் பாதிவரையிலும் அமைக்கலாம். ஆனால் தென்மேற்கு மூலையை காலியாக விட கூடாது.


கிழக்கில் இடம் விடாமல் எல்லை வரை கட்டடம் கட்டி மேற்கில் இடம் விட்டு கட்டப்பட்ட வீட்டில் உள்ளவர்களுக்கு கண் வியாதிகள், நீண்ட வியாதிகள், பக்கவாதம் போன்றவை ஏற்படும். அதேபோல, கிழக்கு தலைவாசல் உள்ள வீடுகளுக்கு தலைவாசலை விட மதிற்சுவர் உயரமாக இருக்க கூடாது. வீட்டின் முக்கிய வாசல் தெருவுக்கு தெரிய வேண்டும்.இல்லையென்றால் கெட்ட பலன்கள் உண்டாகும்.


மேற்கு பார்த்த வீட்டிற்கு கூட கிழக்கில் இடம் விட்டு கட்டடங்கள் கட்டப்பட வேண்டும். கிழக்கில் இடம் விடாமல் எல்லை வரை கட்டிடம் கட்டி மேற்கில் இடம் விட்டு கட்டப்பட்ட வீட்டில் உள்ளவர்களுக்கு கண் வியாதிகள், நீண்ட வியாதிகள், பக்கவாதம் போன்றவை ஏற்படும். எனவே மேற்கு பார்த்த வீட்டிற்கு கூட கிழக்கில் இடம் விட்டு கட்டிடங்கள் கட்டப்பட வேண்டும்.


Also Read | 270 gm தங்கச் செயின் திருச்செந்தூர் முருகனுக்கு காணிக்கை


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR