ரயில் சேவை 100% அளவை எட்டுவது எப்போது... ரயில்வே கூறுவது என்ன..!!
இந்திய ரயில்வேயில் சேவையில், ஒவ்வொரு மாதமும் ரயில்களின் எண்ணிக்கை 100-200 என அதிகரிக்கப்படுகிறது. இருப்பினும், ஐ.ஆர்.சி.டி.சியின் (IRCTC) மூலம் பதிவு செய்யப்படும் ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு குறைவாகவே உள்ளது.
புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பொது முடக்கம் காரணமாக இந்திய ரயில்வேயின் சேவைகள் நீண்ட காலமாக பாதிக்கப்பட்டன. பொது முடக்கத்திற்கு பின்னர் ரயில் சேவைகள் தொடங்கப்பட்டன என்றாலும், இன்னும் 100 சதவீதம் வரை செயல்பாடுகள் தொடங்கப்படவில்லை.
இப்போது ரயில்வே பயணிகளுக்கும் ஐ.ஆர்.சி.டி.சிக்கும் (IRCTC) ஏமாற்றமளிக்கும் மற்றொரு தகவல் வெளிவந்துள்ளது. அனைத்து ரயில்களும் வழக்கம் போல் சேவையை தொடங்க இன்னும் 2 மாதங்கள் ஆகலாம் என்று இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது.
ஒரு மூத்த ரயில் அதிகாரி கூறுகையில், 100% ரயில் சேவை தொடங்குவதற்கு மார்ச் இறுதி வரை ஆகலாம்.
ஐ.ஆர்.சி.டி.சியின் ஆன்லைன் இ-டிக்கெட் முன்பதிவு மூலம் கிடைக்கும் வருவாய் மிகவும் குறைந்துள்ளது.
தற்போது 65% ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன
தற்போது, ரயில்வே அனைத்து பாஸஞ்சர் அல்லது எக்ஸ்பிரஸ் ரயில்களில் 65% ரயில்களை மட்டுமே இயங்குகிறது. இருப்பினும், ஒவ்வொரு மாதமும் ரயில்களின் எண்ணிக்கை 100-200 ஆக அதிகரிக்கப்படுகிறது என ரயில்வே (Railway) கூறியுள்ளது.
இதனுடன், தில்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில், உள்ளூர் ரயில் சேவையை மீண்டும் தொடங்கவும் ரயில்வே ஆலோசித்து வருகிறது. அடுத்த மாதத்தில், டெல்லியில் இருந்து ஹரியானா உள்ள சோனிபட், பல்வால், மகேந்திரகர், குருகிராம் அல்லது ராஜஸ்தானின் அருகிலுள்ள நகரங்களுக்கு நகர்ப்புற ரயில் சேவை மீண்டும் தொடங்கப்படும் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ALSO READ | Voter ID: வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கும் எளிய வழி..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR