Voter ID: வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கும் எளிய வழி..!!

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்குகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வாக்குரிமை உண்டு, இதற்காக அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jan 21, 2021, 09:40 PM IST
  • தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்குகிறது.18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வாக்குரிமை உண்டு.
  • இதற்காக அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
  • புகைப்பட அடையாளத்துடன் கூடிய வாக்காளர் அட்டை முதன்முதலில் 1993 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.
Voter ID: வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா என சரிபார்க்கும் எளிய வழி..!! title=

தமிழ்நாட்டில் தேர்தல் நெருங்குகிறது. 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் வாக்குரிமை உண்டு, இதற்காக அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படுகிறது. தேர்தல் ஆணையத்தின் வாக்காளர் பட்டியலில் உள்ள அனைத்து தகுதி வாய்ந்த வாக்காளர்களிடம் உள்ள வாக்காளர் அட்டை என்பது மிக முக்கியமான சான்றாகும். புகைப்பட அடையாளத்துடன் கூடிய வாக்காளர் அட்டை (Voter ID) முதன்முதலில் 1993 இல் அறிமுகப்படுத்தப்பட்டது.

வாக்காளர்கள்,  தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில்  உள்ளதாக சரிபார்க்க விரும்பினால், கீழே கொடுக்கப்பட்டுள்ள எளிய வழியை பின்பற்றி சர்பார்க்கலாம்.

வழிமுறை 1: www.nvsp.in  என்ற தேசிய வாக்காளர் சேவை போர்ட்டலுக்கு செல்லவும்

வழிமுறை 2: போர்ட்டலின் மேல் இடது மூலையில், ‘வாக்காளர் பட்டியலில் தேடு’ (Search in electoral roll)என்ற ஆப்ஷனை காண்பீர்கள்.

வழிமுறை3: அதில் கிளிக் செய்தால் (https://electoralsearch.in/) என்ற பக்கத்திற்கு செல்லலாம்

வழிமுறை 4: நீங்கள் விவரங்களை பதிவிட்டு தேடலாம் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண் (Electors Photo Identity Card) மூலம் தேடலைத் தேர்வு செய்யலாம்

படி 5: EPIC எண் மூலம் தேட, உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் வழங்கப்பட்ட எண்ணை நீங்கள் உள்ளீடு செய்ய வேண்டும்

படி 6: விவரங்களை கொண்டு தேட விரும்பினால், உங்கள் பெயர், வயது, பாலினம், பிறந்த தேதி, மாவட்டம், தந்தை அல்லது கணவரின் பெயர் போன்ற விவரங்களை நீங்கள் உள்ளீடு செய்ய வேண்டும்.

படி 7: தேவையான விவரங்களை பூர்த்தி செய்து captcha code  உள்ளிடவும்.

படி 8: இப்போது தேட  search பட்டனை அழுத்தவும்.

போர்ட்டலில் உங்கள் பெயர் தோன்றினால், உங்கள் பகுதியில் வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளது என்று அர்த்தம்.

வாக்காளர் பட்டியலில் பதிவு, மாற்றம், நீக்குதல் மற்றும் முகவரி மாற்றத்திற்கும் நீங்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த வலைதளத்தில், நீங்கள் பூத் நிலை அதிகாரி (BLO), வாக்காளர் பட்டியல் அதிகாரி (ERO) மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் தலைமைத் தேர்தல் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் யார் என்பது போன்ற விபரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.
பிரதமர் மோடி, மாநில முதல்வர்களுக்கு தடுப்பூசி எப்போது... வெளியான தகவல்..!!!

ALSO READ | WhatsApp-ற்கு மாற்றான Threema. இதுக்கு நாங்க கியாரண்டி என்கின்றனர் தீவிரவாதிகள்..!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News