ஆண்கள், பெண்கள் என இருபாலினத்தவரும் தங்களுக்கான உரிமையினை கோரி போராட்டங்கள் நடத்தும் போது, அவை பேசப்படும் அளவிற்கு திருநங்களின் உரிமை குரல் வெளியே வருவதில்லை!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அத்தகைய கசப்பான சம்பவம் ஒன்று தான் கொல்கத்தாவை சேர்ந்த திருநங்கை சுசித்திரா தேய் என்பவருக்கு நிகழ்ந்துள்ளது. கல்வி பணியில் கடந்த 10 ஆண்டிற்கும் மேலாக ஈடுப்பட்டு வரும் இவர் இரட்டை முதுநிலை பட்டம் பெற்றவர். நிலவியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு துறைகளிலும் முதுகலை பட்டம் பெற்ற இவர், கொல்கத்தாவின் பிரபல பள்ளி ஒன்றில் பத்து ஆண்டுகளும் மேலாக ஆசிரியராக பணியாற்றி வருகின்றார்.


கொல்கத்தாவின் புகழ்பெற்ற பாடசாலைகள் பலவற்றிலும் இவர் நேர்காணல்கள் சந்தித்தப் போது பலரும் இவரிடம் கேட்ட பொதுவான கேள்விகள் இவரது கசப்பான தருனங்கள் என இவர் பதிவுசெய்துள்ளார்.


இதுகுறித்து அவர் மனம் திறக்கையில், சமுதாயத்தை சீர்குலைக்கும் மக்களின் நோய்வாய்ப்பட்ட மனநிலையில் தான் இத்தகைய கேள்விகள் எழுகின்றன. இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை என குறிப்பிட்டுள்ளார்.


இவரது நேர்காணல்களில் சந்தித்த பொதுவான கேள்விகளில் ஒன்றாக அவர் குறிப்பிடுவது, அவரது பாலின மாற்றத்தை குறித்து கேள்வியாளர்கள் எழுப்பிய கேள்விகளையே அவர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக சுசித்திராவின் மார்பங்கள் உன்மையானவையா? என்ற தனிமனித உரிமை மீறல் கேள்விகளே...



நான் 10 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியுள்ளேன், இரண்டு துறைகளில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன்., ஆனால் இவை அவர்கள் கண்ணுக்கு தெரிவதில்லை. மாறாக என் பாலின மாற்றம் மட்டுமே அவர்களை உருத்துகிறது என தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்... "என்னுடைய மதிப்பெண் பட்டியல்கள் எல்லாம் ஆண் பெயரிலேயே பதிவாகி இருப்பாதல், என்னை ஆண் உடை அணிந்து பள்ளிக்கு வருமாறு கேட்டது ஜூரனிக்க இயலாத விஷயம்" என குறிப்பிட்டுள்ளார்.


கடந்த 2014-ஆம் ஆண்டு, மூன்றாம் பாலினத்தவரை கல்வி நிலையங்களில் பணியமர்த்தலாம் என உச்ச நீதிமன்றம் ஆணை பிரப்பித்துள்ளது, எனினும் இதுவரை மூன்றாம் பாலினத்தவருக்கான உரிமைகள் மறுக்கப்பட்டு தான் வருகின்றது. சுச்சீத்திராவின் குரல் மூலம் இது உலகறிந்தால் நல்லது...