Korean Weight Loss Diet Secrets : இந்தியாவில் கொரியன் ஃபேஷன்களையும், உணவு பழக்கங்களையும் பின்பற்றுபவர்கள் பலர் இருக்கின்றனர். அந்த நாட்டின் இசை,  தொடர்கள் மற்றும் படங்கள் இந்தியர்கள் பலரை கவர்ந்திருக்கிறது. இதற்கு காரணம் கொரியர்களின் முக அமைப்பு என்று கூட சொல்லலாம். இவர்களின் முகத்தைப் பார்த்தால் அதில் எந்தவித முகப்பருவும் இன்றி‍, பளிங்கு போல பளிச்சுன்னு இருக்கும். அதேபோல இவர்களில் பெரும்பாலானோர், உடல் எடை குறைவாக இருப்பவர்கள் ஆக இருப்பர். ஆனால் அதே சமயத்தில் அதிகம் சாப்பிடுபவர்களாகவும் இருப்பர். இவர்கள் நன்றாக சாப்பிட்டும் உடல் எடை இல்லாமல் இருக்க காரணம் அவர்களின் டயட் தான். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

1. காய்கறிகள்: 


கொரிய நாட்டை சேர்ந்தவர்கள் தங்களது உணவில் அதிகமான காய்கறிகளை சேர்த்துக் கொள்கின்றனர். இந்த காய்கறிகள் பைபர் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்தவையாக இருக்கின்றன. அதேபோல இந்த காய்கறிகள் அவர்களின் உடலில் கெட்ட கொழுப்பு ஏறாமலும் பார்த்துக் கொள்கிறது. இதனால் இவர்களின் உடல் எடை ஏறாமல் உள்ளது. அது மட்டுமன்றி, காய்கறிகளை வெறும் சாலட்டுக்களாக மட்டும் சாப்பிடுவதை விட்டுவிட்டு விதவிதமாக செய்தும் சாப்பிடுகின்றனர். 


2.ஆரோக்கிய சமையல்:


கொரிய நாட்டு சேர்ந்தவர்கள் தங்களின் உணவை ஆரோக்கியமான முறையில் சுமக்கின்றனர் . என்னை அதிகமாக ஊற்றி எதையும் வறுத்தெடுப்பதற்கு பதிலாக எண்ணெய் இல்லாமல் சமைக்கின்றனர். அப்படியே எண்ணெயை உபயோகித்தாலும், அதனை வறுக்க மட்டும் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலும் எந்த பொருளையும் வேகவைத்து அல்லது கிரில் செய்து சாப்பிடுகின்றனர். இப்படி எண்ணெயை மிகக் குறைவாக பயன்படுத்துவதால் உங்கள் உடலை கொழுந்து சேராமல் இருக்கிறது. இதனால் இவர்கள் ஒல்லியாக வேண்டுமென தனியாக மெனக்கிட வேண்டாம். 


மேலும் படிக்க | கொரிய பெண்களின் கண்ணாடி சருமம் உங்களுக்கும் வேண்டுமா? காலையில் ‘இதை’ பண்ணுங்க..


3.வீட்டில் சமைத்து உணவுகள்: 


கொரியாவில் உள்ள பெரும்பாலானோர் வீட்டில் சமைத்த உணவையே எங்கு சென்றாலும் கூடவே செல்கின்றனர். துரித உணவுகளுக்கு பதிலாக தங்களின் கலாச்சாரப்படி அல்லது தங்களுக்கு ஏற்றபடி உணவை சமைக்கும் இவர்கள், இதை ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையாக பார்க்கின்றனர். தங்கள் கையால் சமைத்த உணவு சாப்பிடும்போது மட்டுமே முழு திருப்தி ஏற்படுவதாக திருப்தி நினைக்கின்றனர். 


4.புளித்த உணவுகள்: 


கொரியாவில் kimchi என்ற உணவு மிகப்பிரபலம். உப்பு மற்றும் புளிப்பை போட்டு ஊற வைத்த காய்கறிகள்தான் இந்த உணவு வகை. இது அங்கு பிரபலமான சைட் டிஷ் ஆகும். கேரட், ஆப்பிள், பீன்ஸ் உள்ளிட்ட உணவுகளை வைத்து செய்யப்பட்ட உணவு இதுவாகும். இது மெட்டபாலிசத்தை அதிகரித்து செரிமானத்தையும் மேம்படுத்தும். இதனால் உடல் எடையும் மீறாமல் இருக்குமாம்.


5.சர்க்கரை உணவுகள்: 


உடல் எடையை குறைக்க போகிறோம் என்றால் நமக்கு அட்ரஸ் கொடுக்கும் பலர் முதலில் சொல்வது சர்க்கரை உணவை குறைக்க சொல்வதுதான். இதையே கொரியர் களும் பாலோ செய்கின்றனர். சரியான டயட்டை கடைபிடிக்கும் நபர்கள் அதிக உப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வதில்லை. அதற்கு பதிலாக, புரதச்சத்து நிறைந்த ஸ்நாக்ஸ்களையே எடுத்துக் கொள்கின்றனர்.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


 


மேலும் படிக்க | உடல் எடையை குறைக்க கொரியன்ஸ் பின்பற்றும் விநோத பழக்கம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ