)
Myths Related to Diabetes: நீரிழிவு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கும் நோக்கில், உலக நீரிழிவு தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 14 அன்று அனுசரிக்கப்படுகிறது. அந்த வகையில், சமூகத்தில் பரப்பப்படும் நீரிழிவு தொடர்பான பல வகையான கட்டுக்கதைகள் மற்றும் தவறான கருத்துக்கள், நீரிழிவு நோயாளிகளுக்கு தவறான புரிதலை ஏற்படுத்தி, தவறான வழியில் அழைத்துச் செல்கின்றன.
மக்கள் மத்தியில் பரப்பப்படும் கட்டுக்கதைகளின் உண்மையை அறிந்து கொள்வது அவசியம், இதன் மூலம் சரியான தகவல்களை அறிந்து கொண்டு நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தலாம். இந்நிலையில் சர்க்கரை நோய் தொடர்பான ஐந்து முக்கிய கட்டுக்கதைகள் மற்றும் அவற்றின் உண்மை நிலையை அறிந்து கொள்வோம்.
1. இனிப்புகளை சாப்பிடுவதால் மட்டுமே நீரிழிவு நோய் ஏற்படுகிறது
இனிப்பு சாப்பிட்டால் மட்டுமே சர்க்கரை நோய் வரும் என்பது மிகப்பெரிய கட்டுக்கதை. இனிப்பு உணவுகள் ஆரோக்கியத்திற்கு கேடு என்பதில் மாற்று கருத்து இல்லை. அளவிற்கு அதிகமாக சர்க்கரை மற்றும் இனிப்பு உணவுகளை உட்கொள்வது நிச்சயமாக எடை அதிகரிக்க வழிவகுக்கும். நீரிழிவு அபாயத்தையும் அவை அதிகரிக்கின்றன என்பது ஓரளவிற்கு உண்மை தான். ஆனால் நீரிழிவு நோய்க்கு இது மட்டுமே காரணம் அல்ல. வேறு பல காரணங்கள் உள்ளன. இவற்றில், மரபணு காரணிகள், வாழ்க்கை முறை மற்றும் உடல் பருமன் ஆகியவை முக்கியமானவை. டைப்-1 நீரிழிவு என்பது ஒரு தன்னுடல் எதிர்ப்பு நிலை. இதில் உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு கணையத்தின் இன்சுலின் உற்பத்தி செய்யும் செல்களைத் தாக்குகிறது.
2. நீரிழிவு நோய் உள்ளவர்கள் கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்க்க வேண்டும்
நீரிழிவு நோய் இருப்பவர்கள் சமசீரான உணவில் கவனம் செலுத்த வேண்டும், கார்போஹைட்ரேட்டுகள் உட்பட அனைத்து சத்துக்களும் தேவை. ஆரோக்கியமான கொழுப்பு, புரதம் மற்றும் நார்ச்சத்து ஆகியவற்றை உட்கொள்வதும் முக்கியம். கார்போஹைட்ரேட்டுகளும் சரியாக தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். சிக்கலான கார்போஹைட்ரேட்டுகளை உட்கொள்வதால் இரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென அதிகரிக்காது.
3. நீரிழிவு நோயாளிகள் பழங்களை உட்கொள்ள முடியாது
பழங்களில் இயற்கையான சர்க்கரை இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் அவற்றை உட்கொள்ளக்கூடாது என்று பலர் நம்புகிறார்கள். எனினும், இது உண்மையல்ல. ஆப்பிள், பேரிக்காய் மற்றும் ஆரஞ்சு போன்ற சில பழங்களில் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறைவாக இருப்பதால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை வேகமாக அதிகரிக்காது. சீரான அளவில் பழங்களை உட்கொள்வதால், ஆரோக்கியத்திற்கு தேவையான வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் கிடைக்கின்றன.
4. நீரிழிவு நோயை குணப்படுத்த முடியும்
நீரிழிவு ஒரு நீண்ட கால நோயாகும். அதை முழுமையாக குணப்படுத்த முடியாது. இருப்பினும், சரியான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையைப் பின்பற்றுவதன் மூலம் இதைக் கட்டுப்படுத்தலாம். டைப் 2 நீரிழிவு நோயாளிகள் வழக்கமான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான உணவு மூலம் தங்கள் இரத்த சர்க்கரையை சாதாரணமாக வைத்திருக்க முடியும், ஆனால் அவர்கள் முழுமையாக குணமடைந்துவிட்டதாக அர்த்தமல்ல. எப்போதும் கட்டுப்பட்டன உனவு முறை தேவை.
5. சர்க்கரை நோய் என்றால் எப்போதும் இன்சுலின் எடுத்துக்கொள்ள வேண்டும்
நீரிழிவு நோயாளிகள் அனைவரும் இன்சுலின் பயன்படுத்துவதில்லை. டைப்-1 நீரிழிவு நோய்க்கு இன்சுலின் தேவைப்படுகிறது. ஆனால் டைப்-2 நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், வாழ்க்கைமுறை மாற்றங்கள், முறையான உணவுமுறை மற்றும் மருந்துகள் மூலம் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தலாம். மருந்துகள், உணவு பழக்கம் வாழ்க்கை முறையினால், இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்த முடியாத போது மட்டுமே இன்சுலின் பயன்படுத்தப்படுகிறது.
(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ