Koreans Simple Skin Protection Tips : இந்தியாவில் பலர் கொரிய நாட்டை சேர்ந்த பெண்களையும் ஆண்களையும் ரசிப்போம். இதற்கு முக்கிய காரணம் அந்த நாட்டின் தொடர்களும் சில இசைக்கு குழுக்களும்தான். கொரியாவை சேர்ந்த இளைஞர்களுக்கு இந்திய பெண்கள் பலர் ரசிகைகளாக இருக்கின்றனர். இதற்கு காரணம் அவர்கள் அழகு என்பதை தாண்டி அவர்கள் அவர்களை பராமரித்துக் கொள்ளும் விதமும், அவர்கள் பெண்களை நடத்தும் விதமும்தான். அதுமட்டுமல்ல கொரிய நாட்டில் இருக்கும் பலர் பெரும்பாலும் கண்ணாடி போன்ற சருமமுடையவர்களாக இருப்பர். எவ்வளவு வெயில் அடித்தாலும் தங்களது சருமத்தை அதிலிருந்து எப்படி பாதுகாக்க வேண்டும் என்று ட்ரிக்ஸ் தெரிந்தவர்களாகவும் இருப்பர். அதை நாமும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாமே! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சன் ஸ்கிரீன்:


வெயில் அடித்தாலும் மழை அடித்தாலும் கொரியர்கள் சன் ஸ்கிரீன் போடுவதற்கு மறப்பதில்லை. எப்போது வெளியில் செல்லும் முன்னரும் தங்கள் முகங்களிலும் வெயில் படும் இடங்களிலும் சன் ஸ்கிரீன் போட்டுக் கொள்கின்றனர். குறிப்பாக SPF 50 அல்லது அதற்கும் அதிக ஸ்பெக்ட்ரம் கொண்ட சன் ஸ்கிரீன்களை உபயோகிக்கின்றனர். 


வெளியில் செல்வதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு சன் ஸ்கிரீன் போட்டுக் கொள்ள வேண்டும். இரண்டு முதல் மூன்று மணி நேரத்திற்கு ஒருமுறை நமக்கு வேர்த்துக்கொண்டே இருந்தால் மீண்டும் சன் ஸ்கிரீன் போட வேண்டும். முகத்தில் மட்டுமல்ல கழுத்து, காதுகள், கை ஆகியவற்றிற்கும் சன்ஸ்கிரீன் போட வேண்டும்.


முகத்தை மூடிக்கொள்ளுதல்: 


வெயிலில் செல்லும் முன்பு முகத்தையும் வெயிலில் படும் கழுத்தையும் பாதுகாக்க அவர்கள் பெரிய தொப்பி அல்லது ஏதேனும் ஒரு சால்வையால் தங்களை மூடி கொள்கின்றனர். எப்படி அவர்கள் உபயோகிக்கும் சால்வைகள் எடை குறைந்தவையாக இருக்கின்றன. இதனால் வெயிலிலிருந்து அவர்களின் சருமம் தப்பிக்கிறது.


நீர்ச்சத்து: 


சருமம் பளபளப்பாக இருக்க உடலில் நீர் சத்து இருப்பது அவசியம். இதற்காக கொரியர்கள் வெயில் காலத்தில் அதிக தண்ணீர் குடிக்கின்றனர். அப்படி இல்லை என்றால் இளநீர் குடிக்கின்றனர். தங்கள் சாப்பிடும் உணவுகளிலும் பழங்களிலும் வைட்டமின் சி மற்றும் இ இருக்கும் படி பார்த்துக் கொள்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் எடுத்துக் கொள்வது ஆரஞ்சு, பெர்ரி பழங்கள் மற்றும் பாதாம். இது இவர்களின் சருமம் நீர்ச்சத்துடன் இருப்பதை உறுதி செய்கிறது.


மாய்ஸ்டுரைஸ்:


நமது முகங்களில் இருக்கும் சிறு சிறு துளிகள் மூலம் அழுக்குகள் சேர்ந்து அவை ஆங்காங்கே திட்டு திட்டாக படர்ந்தால் வாய் மற்றும் மூக்குப்பகுதிகளுக்கு இடையே கருப்பாக படிந்து விடும். இதை தடுக்க நாம் அடிக்கடி Cleanser உபயோகித்து முகத்தை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். இது முகத்தில் இருக்கும் அழுக்கையும் தூசியையும் நீக்க உதவும். அப்படி செய்த பிறகு முகத்தை மாய்ஸ்டைஸ் செய்தால் சருமம் மிருதுவாக இருக்கும். இதனை செய்ய கொரியர்கள் தவறுவதில்லை.


இயற்கை வைத்தியங்கள்: 


கொரியர்கள் வெயிலில் சென்று வந்தவுடன் கூலாக இருக்கும் கற்றாழை ஜெல்லை முகத்தில் தடவுகின்றனர். இது, சருமத்தை பாதுகாப்பதோடு மட்டுமின்றி வெயிலால் ஏற்படும் பாதிப்பையும் தடுக்கிறது. 


கற்றாழை சாறு இல்லை என்றால் மஞ்சள் மற்றும் தயிர் சேர்த்து ஒரு வாரத்திற்கு ஒரு முறை முகத்தில் தேய்த்தால் கண்டிப்பாக ரிசல்ட் தெரியும். உச்சி வெயில் அடிக்கும் 11-3 மணி வரை இவர்கள் வெயிலில் செல்வதையும் விரும்ப மாட்டார்கள் எனக்கூறப்படுகிறது.


மேலும் படிக்க | எவ்வளவு சாப்பிட்டாலும் வெயிட் ஏறாத கொரியர்கள்! பின்பற்றும் டயட் இதுதான்!!


மேலும் படிக்க | வீண் செலவுகளை குறைக்க ஜப்பானியர்கள் செய்யும் ஒரே விஷயம்! என்ன தெரியுமா?


(பொறுப்பு துறப்பு: இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ