கற்றாழை ஜெல்லை முடிக்கு தேய்த்து வந்தால் உண்மையில் முடி வளருமா?

கற்றாழையில் முடியின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தும் திறன்கள் உள்ளன. இவை முடி மீண்டும் வளர தேவையான சத்துக்களை கொண்டிருப்பதாக ஆய்வில் தெரிவிக்கிறது.

 

1 /6

கற்றாழையில் உள்ள ஆரோக்கியமான சத்துக்களுக்காக பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. முக்கியமாக முடி தொடர்பான பொருட்கள் தயாரிக்க இவற்றை பயன்படுத்துகின்றனர்.   

2 /6

இருப்பினும் பலர் கற்றாழை ஜெல் அப்படியே தலையில் நேரடியாகப் பயன்படுத்துகின்றனர். இதனால் முடி வேகமாக வளரும் என்றும் தெரிவிக்கின்றனர். இது உண்மையா அல்லது பொய்யா என்பதை பார்ப்போம்.  

3 /6

அலோ வேரா ஜெலில் தோல் மற்றும் முடிக்கு நன்மை பயக்கும் பல்வேறு சேர்மங்கள் உள்ளது. வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ, துத்தநாகம், மெக்னீசியம் போன்ற சத்துக்கள் இதில் உள்ளன.   

4 /6

இந்த சத்துக்கள் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து மயிர்க்கால்களை பாதுகாக்கின்றன. இதனால் இவற்றை பயன்படுத்தும் போது முடியின் வளர்ச்சி அதிகமாகிறது.   

5 /6

அலோ வேராவில் உள்ள புரோட்டியோலிடிக் என்சைம்கள் தலையில் உள்ள இறந்த சரும செல்களை அகற்ற உதவுகிறது. இதனால் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை பெறலாம்.   

6 /6

அலோ வேராவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. உச்சந்தலையில் அரிப்பு, எரிச்சல், பொடுகை இருந்தால் அவற்றை சரி செய்ய உதவும். மேலும் முடியை ஆரோக்கியமான பராமரிக்க உதவும்.