குக்கே சுப்ரமணியசுவாமி கோயில் கர்நாடக மாநிலத்தின், மங்களூர் அருகே உள்ள தட்சின கர்நாடக மாவட்டத்தில், சுல்லியா வட்டத்தில், குக்கே சுப்ரமண்ய எனும் கிராமத்தில் அமைந்துள்ளது. இந்த குமார மலையைப் பாதுகாக்கும் விதமாக இதன் அருகே ஆறு தலை பாம்பு வடிவத்தில், சேஷமலை அமைந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


இங்குள்ள மக்கள் இக்கோயிலை குக்கி சுப்பிரமணியசுவாமி கோயில் என்று அழைக்கின்றனர். இக்கோயிலின் மூலவரான முருகனை அனைத்து நாகர்கள் தங்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர். 


குக்கே சுப்ரமணியசுவாமி கோயில் செல்வதற்கு முன், கோயிலுக்கு அருகில் ஓடும் குமாரதாரா எனும் நதியில் புனித நீராடிவிட்டு குக்கே சுப்பிரமணியசுவாமி கோயிலுக்குச் செல்ல வேண்டும். 


புராணக்கதைப்படி, சுப்பிரமணியசுவாமி, தாருகாசூரன், சூரபதுமன் மற்றும் மற்ற கொடிய அசுரர்களைப் போரில் வென்று கொன்ற பின்பு, சுப்பிரமணியசுவாமி, தன் அண்ணன் பிள்ளையாருடன், இக்குமாரமலையில் தங்கினார்கள். அப்போது இந்திரனின் மகளான தேவசேனாவையை, சுப்பிரமணிய சுவாமி மணந்தார். இத்திருமணம், குமாரமலையில் நடந்தது. அன்று முதல் தேவசேனா உடனாய சுப்பிரமணியசுவாமி இங்கு எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளிக்கிறார்.


இந்த கோயிலில் கோயிலில் நடைபெறும் சர்ப்ப சம்கார பூசை எனும் நாக தோச நிவர்த்தி பரிகார பூசை சிறப்பான பூசையாகும். மேலும் அஸ்லேஷா நட்சத்திர நாளில் செய்யப்படும் நாகதோச நிவர்த்தி பரிகார பூசை சிறப்பாக நடைபெறுகிறது.