EPFO தொடர்பாக தெரிந்துக் கொள்ள வேண்டிய ஆனால் பலருக்கு தெரியாத உண்மைகள்
EPFO Interest and Contribution: வருங்கால வைப்பு நிதி கணக்கு தொடர்பான சில அறியப்படாத முக்கிய விஷயங்கள்...
பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் (EPFO) உறுப்பினராக இல்லாத ஒருவர், அருகிலுள்ள வருங்கால வைப்பு நிதி (PF) அலுவலகத்தின் பிராந்திய வருங்கால வைப்பு நிதி ஆணையரை அணுக வேண்டும். ஊழியர் ஒன்றுக்கு மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்தால், அவரது கணக்கு, அவர் பணிபுரியும் நிறுவனங்களின் கணக்கு தனித்தனியாக ஒழுங்குபடுத்தப்படுகிறது. வருங்கால வைப்பு நிதி கணக்கு வைத்திருப்பவர்கள் டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் பல வசதிகளைப் பெறுகின்றனர். இபிஎஃப்ஓ கணக்கு வைத்திருப்பவர்கள் வீட்டிலேயே இருந்தபடியே ஈ-நாமினேஷன் செய்யலாம் என்பது உட்பட பல புதிய மாற்றங்களை பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு கொண்டு வந்துள்ளது.
பொதுவாக, பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பில் நாம் வைத்திருக்கும் கணக்கு தொடர்பாக பலருக்கு சில முக்கியமான விஷயங்கள் தெரிவதில்லை. அதில் சில இவை.
1) ஒரு நபர் எந்த ஊதியமும் பெறாமல் ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்தால், அவருக்கு PF உறுப்பினர் உரிமை இல்லை. ஒரு நிறுவனத்தில் பணியாற்றுவதற்காக, ஊதியம் பெறுபவருக்கு மட்டுமே உறுப்பினர் சேர்க்கை அனுமதிக்கப்படுகிறது.
2) ஒரு EPF உறுப்பினர் வேலையில் இருக்கும் போது தனது உறுப்பினர் நிலையை ரத்து செய்ய முடியாது.
3) ஒருவர் வேலையில் இருந்து விலகிய பிறகும்,EPFO உறுப்பினராகத் தொடரலாம்.
4) ஒரு உறுப்பினரின் பிஎஃப் கணக்கில் தொடர்ந்து மூன்று வருடங்கள் எந்தப் பங்களிப்பும் பெறப்படாவிட்டால், பங்களிப்பை நிறுத்திய மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அந்தக் கணக்குக்கு வட்டி கிடைக்காது. 5) ஒரு நிறுவனம் மூடப்பட்டாலோ, லாக்-அவுட் செய்யபட்டாலோ அல்லது வேலைநிறுத்தம் நடைபெற்றாலும், உறுப்பினர் நிலை தொடரும். இருப்பினும், பங்களிப்பு திரும்பப் பெறப்படாது.
ஒரு உறுப்பினர் தனது அடிப்படைச் சம்பளத்தில் 12 சதவீதத்தை தனது வருங்கால வைப்பு நிதிக்காகப் பங்களிக்கிறார் மேலும் அதற்குச் சமமான தொகையை, அவர் பணி புரியும் நிறுவனம் வழங்குகிறது. பங்களிப்புகள் வேலை வழங்கும் நிறுவனத்தால் முன்கூட்டியே முடிவு செய்யப்படுகின்றன.
மேலும் படிக்க | EPFO ஈ நாமினேஷன் மூலம் கிடைக்கும் பல வித பயன்கள்
EPFO என்பது வாடிக்கையாளர்களின் அடிப்படையில் உலகின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். இபிஎஃபோவில் மேற்கொள்ளப்படும் நிதி பரிவர்த்தனைகளின் அளவு மிகவும் அதிகமானது. தற்சமயம் 24.77 கோடி கணக்குகளை (ஆண்டு அறிக்கை 2019-20) இந்த அமைப்பு பராமரித்து வருகிறது.
கணக்கு/உறுப்பினர் பாஸ்புக்கின் வருடாந்திர வருங்கால வைப்பு நிதி (PF) அறிக்கையானது, முதலாளி செலுத்திய தொகையைக் குறிக்கும். பாஸ்புக்கைப் பார்ப்பதன் மூலம், பணியமர்த்தப்பட்டவரிடமிருந்து கிடைத்துள்ள பங்களிப்பை தெரிந்துக் கொள்ளலாம்.
தற்போது, யுஏஎன் (யுனிவர்சல் அக்கவுண்ட் எண்) மூலம், ஒவ்வொரு மாதமும் இ-பாஸ்புக் மூலம் பங்களிப்புகளை செலுத்துவது தொடர்பான தகவல்கள் குறுஞ்செய்திகள் மூலமாக வந்துவிடுகிறது.
மேலும் படிக்க | EPFO new rules: PF கணக்கு வைத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ