ஆன்லைனில் ஆதார் - வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது எப்படி?

தேர்தலில் முறைகேடுகளை தவிர்க்கும் பொருட்டு ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டைகளை இணைக்க தேர்தல் ஆணையம் வலியுறுத்தி வருகிறது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 5, 2022, 08:07 PM IST
ஆன்லைனில் ஆதார் - வாக்காளர் அடையாள அட்டையை இணைப்பது எப்படி? title=

Voter ID link with Aadhaar card: தேர்தலில் முறைகேடுகளைத் தவிர்க்க, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் அட்டையை இணைக்கும் பிரச்சாரத்தை தேர்தல் ஆணையம் முன்னெடுத்துள்ளது. இதன் மூலம் மோசடிகளை தவிர்க்கலாம் என்கிறது தேர்தல் ஆணையம். அதாவது, ஒன்றுக்கு மேற்பட்ட தொகுதிகளில் அல்லது ஒரே தொகுதியில் ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட முறை வாக்குகள் பதிவு செய்வதை தடுக்க இந்த பிரச்சாரம் உதவும். கடந்த ஆண்டு லோக்சபாவில், தேர்தல் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை, மத்திய அரசு கொண்டு வந்து நிறைவேற்றியது. வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் இணைப்பு கட்டாயம் இல்லை என்றாலும், வாக்காளர் விருப்பத்தின்பேரில் இணைத்துக் கொள்ளலாம். 

வாக்காளர்களின் வசதிக்காக தேர்தல் ஆணையம் பல மாநிலங்களில் இது தொடர்பான முகாம்களை ஏற்பாடு செய்துள்ளது. அங்கு தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாக்காளர்களுக்கு ஆதாரை இணைப்பதற்கு மக்களுக்கு உதவுவார்கள். இது தவிர, மக்கள் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஆன்லைனில் இணைக்கலாம். தேசிய வாக்காளர் சேவைகள் போர்டல்- nvsp.in-ல் இது பற்றிய முழுமையான தகவல்கள் கிடைக்கும். 

மேலும் படிக்க | SBI Alert: போலி செய்தியா, வங்கியின் செய்தியா என எப்படி கண்டுபிடிப்பது?

ஆன்லைனில் இணைப்பது எப்படி?

* முதலில் nvsp.in பக்கத்துக்கு செல்லவும் 
* இப்போது போர்ட்டலின் முகப்புப் பக்கத்தில் உள்ள வாக்காளர் பட்டியலில் கிளிக் செய்யவும்.
* அதன் பிறகு உங்கள் வாக்காளர் அடையாள விவரங்களை உள்ளிடவும்.
* இப்போது Feed Adhaar No வலது பக்கத்தில் காணப்படும், அதைக் கிளிக் செய்து விவரங்களையும் EPIC எண்ணையும் உள்ளிடவும்.
* இதற்குப் பிறகு OTP உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடிக்கு வரும்.
* OTP ஐ உள்ளிட்ட பிறகு, ஆதார் மற்றும் வாக்காளர் அடையாளத்தை இணைப்பது குறித்த அறிவிப்பு திரையில் தோன்றும்.

எஸ்எம்எஸ் மூலம் ஆதார் வாக்காளர் ஐடி இணைப்பது எப்படி?

ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்கும் செயல்முறையை எஸ்எம்எஸ் மூலமாகவும் முடிக்க முடியும். இதற்கு, ECILINK< SPACE> என்ற வடிவத்தில் 166 அல்லது 51969 என்ற எண்ணுக்கு SMS அனுப்ப வேண்டும். ECILINK-க்குப் பிறகு, உங்கள் EPIC எண் மற்றும் ஆதார் எண்ணை உள்ளிடவும்.

இது தவிர, தொலைபேசி அழைப்பு மூலமாகவும் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க முடியும். காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை 1950 என்ற எண்ணிற்கு அழைப்பதன் மூலம் இணைப்பு செயல்முறையை முடிக்கலாம். வாக்காளர்கள் தங்கள் ஆதார் மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை ஆஃப்லைன் செயல்பாட்டில் பூத் லெவல் அலுவலரிடம் விண்ணப்பித்து இணைக்கலாம். இதற்காக அதிகாரிக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.

மேலும் படிக்க | 5G ஏலத்தின் எதிரொலி: ஜியோ-ஏர்டெல்-வி 4ஜி ரீசார்ஜ் பிளான்களின் விலை அதிகரிக்குமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News