இயேசுவின் பிறப்பை கொண்டாடும் நாளான கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் கிறிஸ்தவர்கள் தங்கள் வீடுகளின் முன்பாக கிறிஸ்துமஸ் மரங்களை அமைப்பது, நட்சத்திர விளக்குகள் மற்றும் சீரியல் விளக்குகளைத் தொங்கவிடுவது, இயேசுவின் பிறப்பை சித்தரிக்கும் விதமாக குடில் அமைப்பது என மகிழ்ச்சியுடன் பல வேலைகளைச் செய்து கொண்டிருகிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு கேக் தயாரிப்புக்கான கலவைகளை பதனிடும் பணிகள் அணைத்து இடங்களிலும் விமர்சையாக நடை பெற்று வருகின்றனர். கிறிஸ்துமஸ் தினத்தன்று கேக்கின் சுவை அனைவரையும் சுண்டியிழுக்கும். இங்கிலாந்தில் நாட்டில் இந்த கேக்கானது மிகவும் சிறப்பான ஒன்றாக கருதப்படுகிறது.


ஏனென்றால், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு ஒரு மாதத்துக்கு முன்பு இங்கிலாந்திலுள்ள அனைவரின் வீடுகளில் ப்ளம் கேக் செய்வது வழக்கம்.அதை யொட்டி அனைத்து இடங்களிலும் கேக் தயாரிப்பு விமர்சையாக நடை பெற்று வருகின்றது.


கிறிஸ்மஸ் சமயத்தில் வீடுகள், தேவாலயங்கள், பொது இடங்களில் கிறிஸ்மஸ் மரத்தை அலங்கரித்து காட்சிக்கு வைப்பது வளமை. முதன் முதலில் ஜெர்மனியில் தான் இந்த அலங்காரங்கள் ஆரம்பிக்கப்பட்டன.


1521ஆம் ஆண்டு செலஸ்லாட்டில் என்ற ஊரில் இருந்த செயின்ட் ஜார்ச் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் மரம் வைக்கப்பட்ட தற்கு ஆதாரம் உள்ளது. ஒரு காலத்தில் கிறிஸ்துமஸ் மரத்திற்கு ஒளி கொடுக்க மெழுகு வர்த்திகளை ஏற்றி வைத்தனர். 


இந்த கிறிஸ்துமஸ் மரம் வருடா வருடம், புதுப்புது தொனிப்பொருட்களில் அமைக்கப்படுகிறது. உதாரணமாக தண்ணீர், காற்று, காடுகள், மனித இனம் சார்ந்த தீம்கள் மக்களை கவர்ந்துள்ளன. உதாரணமாக தண்ணீர் என்றால் அது சார்ந்த திமிங் கலங்கள், கடற்குதிரைகள், மீன்கள், கிறிஸ்துமஸ் மரத்தில் பிரதானமாய் காட்சியளிக்கும்.


மேலும், கடந்த இரண்டு வாரங்களாக குண்டானவராக, வெள்ளை தாடியுடன், தொந்தி விழுந்த வயிறுடன், பல வண்ண உடையணிந்து ஒருவர் நடமாடி குழந்தைகளை மகிழ்வித்து கொண்டிருக்கிறார். அவர் வேடிக்கையானவராக சித்தரிக்கப்பட்டிருப்பார். அவர் தான் கிறிஸ்துமஸ் தாத்தா. 


முதன்முதலில் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் போட்டவர் செயிண்ட் நிக்கோலஸ் தான். இவர் பிறந்தது தென் துருக்கியில் இருக்கும் லிசியாவில்தான்.


4ம் நூற்றாண்டை சேர்ந்த நிக்கோலஸ் பிஷப் பதவியில் இருந்தவர். குழந்தைகளிடம் அதிக பிரியம் கொண்டவர். அவர் டிசம்பர் 6ம் தேதி இரவே வந்து கிறிஸ்துமஸ் பரிசுகள். பழங்கள், சாக்லெட்கள், சிறு பொம்மைகள், சிறு பொருட்களை பரிசாக கொடுப்பார். 


அத்துடன் புத்தாடை வாங்கி அணிவது, பட்டாசு கொளுத்துவது, கேக் வெட்டுவது, பலகாரங்கள் செய்வது என கிறிஸ்தவர்களின் வீடுகள் விழாக்கோலம் பூணும். 


எனவே, அத்தகைய கிறிஸ்துமஸ் பண்டிகையில் வரவை எட்டி சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் ஆவலுடன் எதிர் பார்த்து காத்து கொண்டிருகின்றனர்.