எல்ஐசி பங்கு புதுப்பிப்பு: நீங்களும் எல்ஐசி பங்குகளை வாங்கியிருந்தால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கிறது. பங்குச்சந்தையில் பட்டியலிட்ட பிறகு முதல் முறையாக எல்ஐசி தனது நிதிநிலை முடிவுகளை வெளியிட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி மார்ச் காலாண்டிற்கான நிதி நிலை வணிக முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்த முடிவின்படி, நடப்பு நிதியாண்டான 2021-22-ன் நான்காவது காலாண்டில், அதாவது மார்ச் மாதத்தில் நிறுவனத்தின் லாபம் குறைந்துள்ளது. 


இதனுடன், பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட பிறகு இது  நிறுவனத்தின் மூலம் வெளியிடப்படும் முதல் காலாண்டு அறிக்கை என்பதும் குறிப்பிடத்தக்கது. லாபம் குறைந்துள்ள நிலையிலும், எல்ஐசி தனது பங்குதாரர்களுக்கு டிவிடெண்ட் வழங்குவதாக அறிவித்துள்ளது.


எல்ஐசி தகவல் அளித்துள்ளது


எல்ஐசி அளித்த தகவலின்படி, மார்ச் காலாண்டில் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர லாபம் 17 சதவீதம் சரிந்து ரூ.2,409 கோடியாக இருந்தது. அதே சமயம் 2021ல் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த லாபம் ரூ.2,917.33 கோடியாக இருந்தது. அதாவது, எல்ஐசியின் நிகர லாபத்தில் 18 சதவீதம் என்ற பெரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இருப்பினும், இந்த காலகட்டத்தில் பிரீமியம் வருமானம் அதிகரித்துள்ளது.


மேலும் படிக்க | LIC Listing: பங்குச்சந்தையில் களமிறங்கியது எல்ஐசி, முதலீட்டாளர்களுக்கு லாபமா, நஷ்டமா? 


மார்ச் 2022 காலாண்டு முடிவுகளில் இந்த வருமானம் ரூ.2,372 கோடியாக உள்ளது. முந்தைய ஆண்டின் நிகர லாபம் ரூ.2,893 கோடியாக இருந்தது. எல்ஐசி தனது ஐபிஓ-வை இந்த ஆண்டு தொடங்கியுள்ளது. பங்குச்சந்தையில் எல்ஐசி பங்குகளின் விற்பனை மூலம் பெரிய லாபத்தை ஈட்ட அரசாங்கம் தயாராகி வருகிறது.


ஈவுத்தொகை எவ்வளவு கிடைக்கும்?


இப்போது பங்குதாரர்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகளைப் பற்றி காணலாம். எல்.ஐ.சி-யின் வருமான கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ள நிலையிலும், முதலீட்டாளர்களுக்கு, 10 ரூபாய் ஃபேஸ் வேல்யூ உள்ள ஒவ்வொரு பங்குக்கும், பங்குக்கு 1.50 ரூபாய் ஈவுத்தொகையாக வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நிறுவனக் குழுவும் இந்த முன்மொழிவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. 


இந்த முடிவிற்கு பங்குதாரர்களின் ஒப்புதல் மட்டுமே நிலுவையில் உள்ளது. நேற்றைய பங்குச் சந்தையில் எல்ஐசி பங்குகள் மும்பை பங்குச்சந்தையான பிஎஸ்இ-யில் 1.89 சதவீதம் உயர்ந்து ரூ.837.05-ஆக முடிவடைந்தது.


எல்ஐசி பங்குகள் இதுவரை ஐபிஓ வெளியீட்டு விலையில் இருந்து சுமார் 15 சதவீதம் குறைந்துள்ளன. எனினும், எல்ஐசி பங்குதாரர்கள் ஈவுத்தொகையை எதிர்பார்த்து காத்திருந்தனர். அதை இப்போது நிறுவனம் நிறைவேரற்றக்கூடும் என்றே தெரிகிறது. 


மேலும் படிக்க | PPF vs Sukanya Samriddhi Yojana: உங்களுக்கு ஏற்ற முதலீடு எது? முழு கணக்கீடு இதோ 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR