LIC Home Loan: குறைந்த விலையில் சொந்த வீடு வாங்கலாம், எப்படி

குறைந்த வட்டிக்கு வீடு வாங்க திட்டமிட்டிருப்போருக்கு எல்ஐசி ஹோம் லோன் (LIC Home Loan) நல்ல சாய்ஸ்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : May 22, 2022, 11:04 AM IST
  • குறைந்த வட்டிக்கு வீடு வாங்க அரிய வாய்ப்பு
  • வீட்டுக் கடன் எவ்வளவு கிடைக்கும்
  • எல்ஐசி வீட்டுக் கடன் பெற தேவையான ஆவணங்கள்
LIC Home Loan: குறைந்த விலையில் சொந்த வீடு வாங்கலாம், எப்படி title=

சொந்த வீடு என்பது பலருக்கும் மிகப்பெரிய கனவாக உள்ளது. பெரும்பாலானோர் வீட்டுக் கடன் மூலமாகவே சொந்த வீடு கனவை நிறைவேற்றிக்கொள்கின்றனர். வீட்டுக் கடன் என்பது மிகப்பெரிய தொகையாக இருப்பது மட்டுமல்லாமல் பல ஆண்டுகளுக்கு நீடிப்பதாக உள்ளது. எனவே, வீட்டுக் கடன் வாங்குவதற்கு முன் எந்தெங்க வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் மிகக் குறைந்த வட்டிக்கு வீட்டுக் கடன் வழங்குகின்றன என்பதை முழுவதுமாக ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்.

அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் வீடு வாங்க திட்டமிட்டால், எல்ஐசி உங்களுக்காக ஒரு வாய்ப்பைக் கொண்டு வந்துள்ளது. எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் மலிவு வட்டி விகிதத்தில் வீட்டுக் கடன்களை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதன்படி நீங்கள் எல்ஐசியில் வீட்டுக் கடன் வாங்கினால், குறைந்தபட்ச வட்டி விகிதமாக 6.66% செலுத்த வேண்டும்.

மேலும் படிக்க | LIC IPO முக்கிய அப்டேட்: அரசு தரப்பில் அனுப்பப்பட்ட உத்தரவு, விவரம் இதோ 

சிபில் மதிப்பெண்ணை வைத்து வட்டி தீர்மானிக்கப்படும்
குறைந்த சிபில் ஸ்கோர் உள்ளவர்களுக்கு பல்வேறு கட்டணங்களில் வீட்டுக் கடன் வசதியை நிறுவனம் வழங்குகிறது. அதன்படி சிபில் ஸ்கோரை பொறுத்து ரூ.50 லட்சம் வரை வீட்டுக் கடன் வாங்கும் சம்பளதாரர்கள் மற்றும் தொழில்புரிவோருக்கு ஆண்டு வட்டி விகிதம் 6.90 % முதல் 7.50% வரை விதிக்கப்படுகிறது.

ரூ,50 லட்சத்திற்கு மேல் ரூ.1 கோடிக்குள் கடன் வாங்கும் சம்பளதாரர்கள் மற்றும் தொழில்புரிவோருக்கு ஆண்டு வட்டி விகிதம் 6.90 % முதல் 7.70 % வரை விதிக்கப்படுகிறது. சம்பளம் பெறாத மற்றும் தொழில் புரியாதோர் வாங்கும் ரூ.50 லட்சம் முதல் ரூ.1கோடி வரையிலான கடன்களுக்கு 7.00% லிருந்து 7.80 % வட்டி விதிக்கப்படுகிறது.

வீட்டுக் கடன் எவ்வளவு கிடைக்கும்
நீங்கள் எல்ஐசி எச்.எஃப்.எல் இலிருந்து வீட்டுக் கடனுக்கு விண்ணப்பித்தால், உங்கள் சொத்தில் 90 சதவிகிதம் வரை கடன் கிடைக்கும். 30 முதல் 75 லட்சம் ரூபாய் கடனுக்கு விண்ணப்பித்தால், உங்கள் சொத்தில் 80 சதவீதம் வரை கடன் கிடைக்கும். 75 லட்சத்துக்கு மேல் எடுத்தால் சொத்து மதிப்பில் 75 சதவீதம் கிடைக்கும்.

எல்ஐசி வீட்டுக் கடன் பெற தேவையான ஆவணங்கள்:
* ஆதார் கார்டு
* பான் கார்டு
* முகவரிச் சான்று
* சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு சம்பள விபரம்
* சுய தொழில் செய்வோருக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கான வருமான வரித் தாக்கல்
* ஆறு மாத வங்கி அறிக்கை
* சொத்து உரிமை ஆவணம்
* வரி ரசீது

மேலும் படிக்க | LIC IPO: நாட்டின் மிகப்பெரிய ஐபிஓ இன்று துவக்கம், ஆவலுடன் காத்திருக்கும் முதலீட்டாளர்கள் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News