பிபிஎஃப் Vs சுகன்யா சம்ரித்தி யோஜனா: நீங்களும் உங்கள் குழந்தையின் பிரகாசமான எதிர்காலத்திற்காக முதலீடு செய்ய விரும்பினால், கண்டிப்பாக இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பிபிஎஃப் மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா இரண்டும் மிகவும் பிரபலமான முதலீடுகளாகும்.
இவற்றில் முதலீடு செய்வதன் மூலம் நீங்கள் சிறந்த லாபத்தைப் பெறலாம். எஸ்எஸ்ஒய் எனப்படும் சுகன்யா சம்ரித்தி யோஜனா மற்றும் பிபிஎஃப் எனப்படும் பொது வருங்கால வைப்பு நிதி இரண்டிலும் முதலீடு செய்வதன் மூலம், உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும், நல்ல வருமானமும் கிடைக்கும். ஆனால் இந்த இரண்டில் எது சிறந்தது என்ற குழப்பம் மக்களிடையே உள்ளது. ஒரு கணக்கீடு மூலம் அதை புரிந்துகொள்வோம்.
இரண்டு அரசு திட்டங்களும் பிரபலமானவை
நீங்கள் யாருடைய பெயரில் வேண்டுமானாலும் பிபிஎஃப்-ல் முதலீடு செய்யலாம். ஆனால் மத்திய அரசின் பிரபலமான திட்டமான சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்எஸ்ஒய்) திட்டத்தில் உங்கள் மகளின் பெயரில் மட்டுமே முதலீடு செய்ய முடியும். இதில், முதிர்ச்சியில் நல்ல லாபம் கிடைக்கும்.
மேலும் படிக்க | ரூ.2000 நோட்டுக்கள் புழக்கம் வெகுவாக குறைந்தது ஏன்... RBI கூறிய முக்கிய தகவல்
பிபிஎஃப் Vs சுகன்யா சம்ரித்தி யோஜனா
தற்போது, பிபிஎஃப் மீதான வட்டி விகிதம் 7.1 சதவீதமாகவும், சுகன்யா சம்ரித்தி யோஜனா மீதான வட்டி விகிதம் 7.6 சதவீதமாகவும் உள்ளது. இதன் அடிப்படையில், சுகன்யா சம்ரித்தி யோஜனாதான் சிறந்தது என்றே உங்களுக்குத் தோன்றும். ஆனால் அது அப்படியெல்லாம் இல்லை. நீங்கள் இரண்டு திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். பிபிஎஃப்-ல் குறைந்த வட்டி கிடைத்தாலும், அதில் கண்டிப்பாக முதலீடு செய்யலாம்.
பிபிஎஃப்-இல் முதலீடு செய்வதால் என்ன நன்மைகள் கிடைக்கும்?
பிபிஎஃப்-க்கு 15 ஆண்டுகள் லாக்-இன் காலம் உள்ளது. உங்கள் சொந்தக் கணக்கீடு மற்றும் விருப்பத்தின்படி 15 ஆண்டுகளுக்குப் பிறகு 5 ஆண்டுகளாக மேலும் நீட்டித்துக்கொள்ளலாம். இது ஒரு பாதுகாப்பான முதலீடாகும். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த இரண்டு திட்டங்களிலும் முதலீடு செய்வதன் மூலம், வருமான வரியின் 80சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் வரையிலான முதலீட்டில் நீங்கள் விலக்கு பெறுவீர்கள்.
சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் முதலீடு செய்வதன் நன்மைகள்
நீங்கள் சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் (SSY) முதலீடு செய்ய விரும்பினால், குறைந்தபட்சம் ரூ.250 முதல் அதிகபட்சமாக ரூ.1.50 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இந்த திட்டம் குறிப்பாக பெண்களுக்காக கொண்டு வரப்பட்டுள்ளது. பிபிஎப்-ஐ விட இதில் அதிக வட்டி கொடுக்கப்படுவதற்கு இதுவே காரணமாகும். உங்கள் மகளுக்கு 15 வயது ஆகும் வரை இந்தத் திட்டத்தில் முதலீடு செய்யலாம்.
எவ்வளவு நன்மை?
இப்போது இதனால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி பேசலாம். பிபிஎஃப் கணக்கில் ஒவ்வொரு ஆண்டும் ரூ.1.50 லட்சத்தை டெபாசிட் செய்தால், தற்போதைய வட்டி விகிதத்தில் (7.1 சதவீதம்) 15 வருட முதிர்ச்சியில் ரூ.40.68 லட்சத்தைப் பெறுவீர்கள். சுகன்யா சம்ரித்தி யோஜனாவில் (SSY) ஒவ்வொரு ஆண்டும் ரூ.1.50 லட்சத்தை முதலீடு செய்தால். 21 வருட முதிர்ச்சியில் 63 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் கிடைக்கும். அத்தகைய சூழ்நிலையில், இந்த இரண்டு திட்டங்களிலும் நீங்கள் முதலீடு செய்தால், நீங்கள் அதிக நன்மைகளைப் பெறுவீர்கள்.
மேலும் படிக்க | 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு மாஸ் செய்தி, மே 31-க்குள் அறிவிப்பு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR