புது தில்லி: எல்ஐசி தனது ஐபிஓவை பங்குச் சந்தையில் மிக விரைவில் வெளியிடவுள்ளது. இதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எல்ஐசி, சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபியிடம் ஞாயிற்றுக்கிழமை வரைவு ஆவணங்களை சமர்ப்பித்தது. இப்போது, ​​பங்குச் சந்தையும், முதலீட்டாளர்களும் எல்ஐசி ஐபிஓ-க்காக காத்திருக்கிறார்கள்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

எல்ஐசி ஐபிஓ-வுக்காக அனைவரும் இவ்வளவு ஆவலுடன் காத்திருக்க காரணம் என்ன? அந்த அளவுக்கு இதில் என்ன சிறப்பு உள்ளது? என பலருக்கு கேள்வி எழலாம். எல்ஐசி நிறுவனம் செப்டம்பர் 2021 இல் அதன் நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்து (AUM) மதிப்பு ரூ. 39.6 லட்சம் கோடி என்ற விவரத்தை வெளிப்படுத்தியது. அப்போதிருந்து, முதலீட்டாளர்களின் ஆர்வம் இதில் அதிகரித்துள்ளது. எல்ஐசி ஐபிஓ-வில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் இதைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய சில முக்கிய அம்சங்கள் உள்ளன. அவற்றைப் பற்றி இந்த பதிவில் காணலாம். 


எல்ஐசி நாட்டின் மிகப்பெரிய லிஸ்டட் நிறுவனமாக இருக்கும்


லண்டனைச் சேர்ந்த பிராண்ட் ஃபைனான்ஸ் கருத்துப்படி, இந்த ஆண்டு எல்ஐசி-யின் சந்தை மதிப்பு 43 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 2027-ம் ஆண்டுக்குள் இது ரூ.58.9 லட்சம் கோடியை எட்டும். இதன் மூலம், அடுத்த சில ஆண்டுகளுக்கு நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக இது இருக்கும். தற்போது நாட்டின் மிகப்பெரிய நிறுவனமாக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் உள்ளது. இதன் மதிப்பு சுமார் 16 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.


மேலும் படிக்க | LIC IPO மிக விரைவில்? பங்கு விற்பனைக்கான ஆவணங்கள் தாக்கல்! 


புதிய வணிக பிரீமியம் வளர்ச்சியும் சிறப்பாக உள்ளது


2021-22 நிதியாண்டின் முதல் பாதியில் எல்ஐசியின் வரிக்குப் பிந்தைய லாபம் ரூ.1,437 கோடியாக இருந்தது. முந்தைய ஆண்டு இதே காலத்தில் இந்த லாபம் ரூ.6.14 கோடியாக இருந்தது. இந்த நிதியாண்டின் முதல் பாதியில், எல்ஐசியின் புதிய வணிக பிரீமியத்தின் வளர்ச்சி விகிதம் 554.1 சதவீதமாக இருந்தது. 522 பில்லியன் டாலர்களுடன் மொத்த சொத்துக்களின் அடிப்படையில் இது உலகின் ஆறாவது பெரிய காப்பீட்டு நிறுவனமாகும்.


உரிமை அரசிடமே இருக்கும்


தற்போது எல்ஐசியின் உரிமை அரசிடம் உள்ளது. அதில் 5 சதவீத பங்குகளை விற்பனை செய்தாலும், அரசே அதன் உரிமையாளராக இருக்கும். சட்டப்படி எல்ஐசியில் அரசின் பங்கு 51 சதவீதத்துக்கும் குறைவாக இருக்கக் கூடாது. இது தவிர, 5 ஆண்டுகளில், அரசு, எல்ஐசியில் 25 சதவீதத்துக்கு மேல் தனது பங்குகளை விற்க முடியாது.


எல்ஐசியின் சந்தைப் பங்கு மற்றும் ஈக்விட்டி மீதான வலுவான வருவாய்


இன்சூரன்ஸ் சந்தையில் எல்ஐசியின் மொத்த பங்கு 64.1% ஆகும். ஈக்விட்டி மீதான அதன் வருமானம் 82 சதவீதமாக உள்ளது. ஆயுள் காப்பீட்டு பிரீமியத்தின் அடிப்படையில் இது உலகின் மூன்றாவது பெரிய காப்பீட்டு நிறுவனமாகும். சீனக் காப்பீட்டு நிறுவனமான பிங்கின் ஈக்விட்டியின் மீதான வருவாய் 19.5 சதவீதமாகவும், அவிவாவின் வருமானம் 14.8 சதவீதமாகவும் உள்ளது. சைனா லைஃப் இன்சூரன்ஸ் ஈக்விட்டியில் 11.9 சதவீத வருமானத்தைக் கொண்டுள்ளது.


மேலும் படிக்க | LIC IPO Opening Date முக்கிய அப்டேட்: பணத்துடன் தயாரா இருங்க, முதலீட்டுக்கான சூப்பர் வாய்ப்பு!! 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR