LIC Policy: ப்ரீமியம் தொகையை கட்ட UPI ஒரு சிறந்த வழி, முழு செயல்முறை இதோ
LIC Policy Update: கால மாற்றத்துக்குப் பிறகு, எல்ஐசி தனது பிரீமியத்தை ஆன்லைனில் டெபாசிட் செய்யும் வசதியைத் தொடங்கியது.
கடந்த சில ஆண்டுகளாக, டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் விரைவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தற்போது அனைத்து இன்சூரன்ஸ் நிறுவனங்களும் டிஜிட்டல் முறையில் இன்சூரன்ஸ் பிரீமியத்தை செலுத்தும் வசதியை மக்களுக்கு அளித்து வருகின்றன.
முந்தைய காலங்களில், காப்பீட்டு பிரீமியத்தை டெபாசிட் செய்ய எல்ஐசி அல்லது வேறு நிறுவன கிளைகளுக்கு சென்று மக்கள் நீண்ட வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. இதனால் அதிக நேரம் விரயம் ஆனது. ஆனால், கால மாற்றத்துக்குப் பிறகு, எல்ஐசி தனது பிரீமியத்தை ஆன்லைனில் டெபாசிட் செய்யும் வசதியைத் தொடங்கியது.
எல்ஐல்சி பாலிசியின் பிரீமியம் யுபியை
கடந்த சில ஆண்டுகளில், யுபிஐ டிஜிட்டல் பேமெண்ட் பயன்பாட்டில் பெரும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட்போன் மற்றும் இணைய வசதி உள்ளது. மக்களால் யுபிஐ உதவியுடன் பணத்தை எளிதாக மாற்ற முடிகின்றது.
மக்கள் மத்தியில் யுபியை-ன் பயன்பாடு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் (எல்ஐசி) பாலிசிதாரர்களுக்கு யுபிஐ மூலம் பிரீமியத்தை டெபாசிட் செய்யும் வசதியை வழங்கத் தொடங்கியுள்ளது.
இப்போது நீங்கள் நெட் பேங்கிங், கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் யுபிஐ மூலம் பணம் செலுத்தலாம். இதற்கு பேடிஎம், பாரத் பே, கூகிள் பே, போன்பே போன்றவற்றின் மூலமாகவும் எல்ஐசி பிரீமியத்தைச் செலுத்தலாம். எல்ஐசி பாலிசி வைத்திருப்பவர்கள் யுபிஐ மூலம் எல்ஐசி பிரீமியத்தை எந்த வழியில் செலுத்தலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும் படிக்க | LIC IPO முக்கிய அப்டேட்: ஏப்ரல் மாத இறுதியில் ஐபிஓ வெளிவரக்கூடும்
யுபிஐ மூலம் எல்ஐசி பிரீமியத்தை செலுத்தும் செயல்முறை:
- பேடிஎம், பாரத் பே, கூகிள் பே, போன் பே போன்ற எந்த யுபிஐ செயலிகளைப் பயன்படுத்தவும் முதலில் செயலிக்குள் நுழையவும்.
- இதற்குப் பிறகு, நீங்கள் பில் பேமென்ட் விருப்பத்தைக் கிளிக் செய்ய வேண்டும்.
- அடுத்து நிதி மற்றும் வரி விருப்பத்தைத் (ஃபைனான்ஸ் அண்ட் டேக்ஸ் ஆப்ஷன்) தேர்ந்தெடுக்கவும்.
- இதற்குப் பிறகு எல்ஐசி என்ற ஆப்ஷனைக் காண்பீர்கள். அதை கிளிக் செய்யவும்.
- அடுத்து உங்கள் எல்ஐசி பாலிசி இணைப்பு விருப்பம் தோன்றும். அதை கிளிக் செய்யவும்.
- இங்கே நீங்கள் பாலிசி எண் மற்றும் மின்னஞ்சல் ஐடியை உள்ளிட வேண்டும்.
- அதன் பிறகு, பாலிசியின் முழு விவரங்களையும் பார்க்கலாம். ஒருமுறை சரிபார்த்துவிட்டு சப்மிட் செய்யவும்.
-இப்போது பாலிசி மற்றும் யுபியை ஐடி இணைக்கப்பட்ட பிறகு, பிரீமியத்தை எளிதாகச் செலுத்தலாம்.
- இதற்கு, நீங்கள் பிரீமியம் தொகை மற்றும் பின்னை உள்ளிட்டு சப்மிட் செய்தால் போதும். உங்கள் பிரீமியம் யுபிஐ மூலம் செலுத்தப்படும்.
மேலும் படிக்க | காலாவதியான பாலிஸியை புதுப்பிக்க அரிய வாய்ப்பு; அபராத கட்டணத்தில் 30% வரை தள்ளுபடி
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR