இணையத்தைப் பயன்படுத்தாமல் UPI-ல் பணம் செலுத்துவது எப்படி?

ஸ்மார்ட்போன்கள் மட்டுமல்லாது சாதாரண போன்களிலும் இனி இணைய வசதி இல்லாமல் யுபிஐ பேமெண்ட் செலுத்தும் வசதி அறிமுகமாகவுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Apr 2, 2022, 09:04 AM IST
  • இந்திய ரிசர்வ் வங்கி தொலைபேசிகளுக்காக UPI23PAY ஐ அறிமுகப்படுத்தியது.
  • இந்த அம்சத்தைப் பயன்படுத்த உங்களுக்கு இணையம் தேவையில்லை.
  • டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கு மத்திய வங்கியிடமிருந்து 24x7 ஹெல்ப்லைனும் உள்ளது.
இணையத்தைப் பயன்படுத்தாமல் UPI-ல் பணம் செலுத்துவது எப்படி? title=

இந்தியாவில் பெரும்பாலானோர் தற்போது டிஜிட்டல் பரிவர்த்தனை முறையை பயன்படுத்த தொடங்கிவிட்டனர்.  குறிப்பாக இந்த முறை அதிகரித்தது எப்போதிலிருந்து என்றால் இந்தியாவில் பணமதிப்பிழப்பு ஏற்பட்ட பிறகு தான், பணமதிப்பிழப்பின்போது பலரும் டிஜிட்டல் பரிவர்தனைகளையே நாடினர்.  அதனை தொடர்ந்து கடந்த இரண்டு வருட காலமாக இருந்துவரும் தொற்றுநோய் பரவலாலும் இந்த செயல்முறை அதிக பயன்பாட்டிற்கு வந்துள்ளது.  இருப்பினும் இந்த முறையை ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது சற்று அதிருப்தியை அளித்து வந்த நிலையில் தற்போது அந்த நிலை மாறியுள்ளது.

மேலும் படிக்க | ஆப்பிளின் இந்த 6 அம்சங்கள் இந்தியாவில் செயல்படாது!

இனிமேல் சாதாரண பட்டன் போன்களை வைத்திருப்பவர்கள் கூட இதற்கு யுபிஐ  பேமெண்ட் செய்யலாம்.  இதற்காக இந்திய ரிசர்வ் வங்கி இந்த மாத தொடக்கத்தில் ஒரு யுபிஐ  கட்டண அம்சத்தை அறிமுகப்படுத்தியது.  இதன் மூலம் இந்தியாவின் கடைக்கோடியில் சாதாரண போன்களை வைத்திருப்பவர்கள் கூட எளிமையாக யுபிஐ பேமெண்ட் செய்யலாம். 'UPI 123PAY' என்னும் உடனடி கட்டண முறையில், சாதாரண மொபைல் பயன்படுத்துபவர்கள், யுபிஐ எனப்படும் யூனிஃபைடு பேமெண்ட்ஸ் இன்டெர்பேஸ் சேவை மூலம் இனி பாதுகாப்பான முறையில் கட்டணங்களை செலுத்தலாம்.  சாதாரண மொபைல்களை பயன்படுத்துபவர்கள் UPI 123PAY மூலம், நான்கு தொழில்நுட்ப மாற்றங்களின் அடிப்படையில் பல பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம்.  

இதில் ஐவிஆர் எண்ணை அழைப்பது, சாதாரண மொபைல்களிலுள்ள ஆப்களின் செயல்பாடு, மிஸ்டு கால் அடிப்படையிலான அணுகுமுறை மற்றும் ப்ராக்ஸிமிட்டி ஒலி அடிப்படையிலான கட்டணங்கள் ஆகியவை அடங்கும் என்று நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா அதன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தெரிவிக்கிறது.  இந்த அம்சத்தைப் பயன்படுத்த இணையம் தேவையில்லை.  இந்த DigiSaathi எனப்படும் டிஜிட்டல் பேமெண்ட்டுகளுக்கு மத்திய வங்கி 24x7 ஹெல்ப்லைனை வழங்குகிறது.  தற்போது மிஸ்டு கால் வாயிலாக பேமெண்ட் செய்யும் அம்சத்தை எப்படி பெறலாம் என்பது குறித்து இங்கே காண்போம்.  மேலும் இந்த வசதியை சாதாரண மொபைல் பயன்பாட்டாளர்கள் மட்டுமல்லாது, இணையவசதி துண்டிக்கப்பட்ட ஸ்மார்ட்போன் பயனர்களும் பயன்படுத்தி கொள்ளலாம்.  பின்வரும் படிநிலைகளை பின்பற்றுவதன் மூலம் எப்படி இதனை பயன்படுத்தலாம் என்று பார்ப்போம்,

- கடையில் காட்டப்பட்டுள்ள எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுங்கள்.

- ஐவிஆர் அழைப்பைப் பெற்றவுடன் பண பரிமாற்றம் செய்வதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.

- நீங்கள் ட்ரான்ஸாக்ஷன் செய்ய வேண்டிய தொகையை இப்போது உள்ளிடவும்.

- பின்னர் யுபிஐ பின்னை பதிவிட்டதும் பண பரிமாற்றம் வெற்றிகரமாக நடைபெறும்.

மேலும் படிக்க | Hacking-ல் இருந்து உங்கள் ஸ்மார்ட்போனை பாதுகாக்க 3 வழிகள்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News