ரூ 225 ரீசார்ஜில் லைஃப்லாங் வேலிடிட்டி! இந்த ரீசார்ஜ் திட்டத்துடன் வேறு யாரும் போட்டியிட முடியாது
Long Validity Recharge Plan: வெறும் 225 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதும், வாழ்நாள் வேலிடிட்டி கிடைக்கும். ஏர்டெல், ஜியோ, வோடாபோன் என எல்லா நிறுவனங்களும் இந்த திட்டத்தைப் பார்த்து அரண்டு போயுள்ளன
புதுடெல்லி: ஸ்மார்ட்போனின் ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் செல்லுபடியாகும் காலம் குறைவாக உள்ளது, எனவே அதை ஈடுகட்ட ஒரு புதிய திட்டம் சந்தையில் வந்துள்ளது, இது உங்களுக்கு லைஃப் டைம் செல்லுபடியாகும். இந்த திட்டம் அனைவரின் ஆர்வத்தையும் தூண்டுவதாக உள்ளது. வெறும் 225 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்தால் போதும், வாழ்நாள் வேலிடிட்டி கிடைக்கும். ஏர்டெல், ஜியோ, வோடாபோன் என எல்லா நிறுவனங்களும் இந்த திட்டத்தைப் பார்த்து அரண்டு போயுள்ளன.
உங்கள் ரீசார்ஜ் காலம் முடிந்துவிட்டால், உங்களின் அனைத்து சலுகைகளும் முடிவடையும், ஆனால் இப்போது சந்தையில் ஒரு புதிய ரீசார்ஜ் திட்டம் வந்துள்ளது, அதன் செல்லுபடியாகும் காலம் முடிவடையாது. இதன் பொருள், மலிவு விலையில் வாழ்நாள் செல்லுபடியாகும் ரீசார்ஜ் திட்டம் இது என்பதே ஆகும்.
இந்தத் திட்டம் பற்றி பலருக்கு தெரியவில்லை. நீங்களும் இதைப் பயன்படுத்தி, லைஃப்லாங் வேலிடிட்டி பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் படிக்க | BSNL பயனார்களே..அருமையான 2 பிளான்கள்; உடனே ரீசார்ஜ் செய்யுங்க
லைஃப் டைம் வேலிடிட்டி திட்டம்
MTNL வழங்கும் இந்த திட்டத்தில் 225 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, உங்களுக்கு லைஃப் டைம் வேலிடிட்டி கிடைக்கும் மேலும் சிம் கார்டு காலவதியாகிவிடுமோ என்ற கவலையும் இல்லை. இந்தத் திட்டம் உங்களுக்குப் பிடித்திருந்தால், உடனே 225 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து லைஃப் டைம் வேலிடிட்டி பெறுங்கள்.
இந்தத் திட்டத்தில் என்னென்ன நன்மைகள் உள்ளன?
இந்த திட்டத்தின் விலை 225 ரூபாய் என்பது தெரிந்துவிட்டது. ஆனால், இதில் என்ன நன்மைகள் வழங்கப்படுகின்றன என்பதையும் தெரிந்துக் கொள்ளுங்கள். இந்த திட்டத்தில் உள்ள பயனர்களுக்கு 100 நிமிட அழைப்பு நிமிடங்கள் வழங்கப்படுகின்றன. இது மட்டுமல்லாமல், இந்த திட்டத்தை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு குரல் அழைப்புக்கு வினாடிக்கு 0.02 பைசா வசூலிக்கப்படுகிறது.
இது ஒரு வகையில் சிக்கனமானதாக இருக்கிறது. இந்த திட்டத்தில், வாடிக்கையாளர்களுக்கு முழு வாழ்நாள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது, இது மிகப்பெரிய நன்மை என்பதோடு, சிம் கார்டு காலவதியாவதில்லை.
மேலும் படிக்க | சத்தமில்லாமல் ஜியோ செய்த காரியம்... 12 ரீசார்ஜ் பிளான்கள் காலி - ஐபிஎல் தான் காரணமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ