இந்தியாவின் முன்னணி அரசு தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல் அதாவது பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் பயனர்களுக்கு பல மலிவான ரீசார்ஜ் திட்டங்களை வழங்குகி வருகின்றது. தற்போது, நாம் பி.எஸ்.என்.எல் இன் முழு மாத வேலிடிட்டி ரீசார்ஜ் பிளான் பற்றி காண உள்ளோம். அதாவது ஒரு மாதத்தில் 30 நாட்கள் அல்லது 31 நாட்கள் இருந்தால், பி.எஸ்.என்.எல் பயனர்களுக்கு மாதம் முழுவதும் ரீசார்ஜை அனுபவிக்கும் வசதியை வழங்கும். தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியாவுடன் ஒப்பிடுகையில், பிஎஸ்என்எல் இன் இந்த ரீசார்ஜ் பிளான் மிகவும் மலிவானது. அந்தவகையில் பி.எஸ்.என்.எல் தனது பயனர்களுக்கு முழு மாத வேலிடிட்டியுடன் வெறும் ரூ.228 மற்றும் ரூ.239க்கு பல அம்சங்களை இலவசமாக வழங்குகிறது. எனவே இந்த திட்டத்தின் அம்சங்களைப் பற்றிய விரிவான தகவல்களை இங்கே காண்போம்.
பிஎஸ்என்எல் 228 ப்ரீபெய்ட் திட்டம்
பிஎஸ்என்எல் இன் ரூ.228 திட்டத்தைப் பற்றி பேசுகையில், இந்த திட்டத்தில் பயனர்களுக்கு அன்லிமிடெட் காலிங்க மற்றும் 2ஜிபி இன்டர்நெட் டேட்டா வழங்கப்படுகிறது. இதனுடன், இந்த திட்டத்தில் 100 எஸ்எம்எஸ் இலவசமாகும். மறுபுறம், பயனர்கள் 2 ஜிபி டேட்டாவை பயன்படுத்திய பிறகு, அதன் வேகம் 80 கேபிபிஎஸ் ஆக செயல்படும். இந்த திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசுகையில், இதில் முழு மாதத்தின் வேலிடிட்டியை பயனர் பெறுவார்கள். இது தவிர, இந்த திட்டத்தில் உள்ள ப்ரோக்ரசிவ் வெப் பயன்பாட்டில் சேலஞ்ச் அரீனா மொபைல் கேமிங் சேவையைப் பயன்படுத்த பயனர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
மேலும் படிக்க | Loan App: இதை செய்தால் கடன் செயலிகளின் தொல்லை இருக்காது
பிஎஸ்என்எல் 239 ப்ரீபெய்ட் திட்டம்
மறுபுறம் பிஎஸ்என்எல் இன் ரூ.239 ப்ரீபெய்ட் திட்டத்தைப் பற்றி நாம் பேசிகையில், இதிலும் பயனர்களுக்கு அன்லிமிடெட் காலிங்க, ஒரு நாளைக்கு 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒரு நாளைக்கு 2 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. மொத்தத்தில், இந்த திட்டத்தில் பயனர்கள் 60 ஜிபி டேட்டாவைப் பெறுகிறார்கள். அதே நேரத்தில், 2ஜிபி டேட்டா தீர்ந்த பிறகும் இந்த திட்டத்தில் 80 கேபிபிஎஸ் வேகம் இருக்கும். இது தவிர ரோமிங் சேவையும் இந்த திட்டத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி பற்றி பேசுகையில், முழு மாதத்தின் வேலிடிட்டி இதில் கொடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில் இந்த ரீசார்ஜ் திட்டங்களை நீங்கள் பெற விரும்பினால், முதலில் உங்கள் வட்டத்தில் உள்ள வசதிகளைச் சரிபார்க்கவும்.
மேலும் படிக்க | சத்தமில்லாமல் ஜியோ செய்த காரியம்... 12 ரீசார்ஜ் பிளான்கள் காலி - ஐபிஎல் தான் காரணமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ