Auto News in India: இந்தியாவின் இரு சக்கர வாகனத் துறையில் (two-wheeler industry) ஒரு பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. தற்போது மக்கள் பைக்குகளை வாங்குவதற்கு பதிலாக ஸ்கூட்டர்களை வாங்குவதற்கு முன்னுரிமை அளித்து வருகின்றனர். இதன் காரணமாக இரு சக்கர வாகன பிரிவில் பைக்குகளுடன் புதிய ஸ்கூட்டர்களையும் அறிமுகப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறன்றன. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பைக்குகளை விட ஸ்கூட்டர்களின் (Scooter) சந்தை திடீரென அதிக விற்பனையை கண்டு வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு பல நிறுவனங்கள் புதிய ஸ்கூட்டர்களை (new scooters in india) அறிமுகப்படுத்தி வருகின்றன. வாடிக்கையாளர்கள் ஸ்கூட்டர்களை வாங்க வேண்டும் என்பதற்காக கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கி மக்களை ஈர்ப்பதில் கவனம் செலுத்துகின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை அதிகமாக அதிகரிக்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.


ALSO READ |  குறைந்த விலையில் 3 சக்தி வாய்ந்த ஸ்கூட்டர்கள், முழு விவரம் இங்கே


இரு சக்கர வாகன பிரிவில் பல புதிய புதிய ஸ்கூட்டர் மாடல்களை (News Model Scooty) பார்க்க முடிகிறது. ஆனால் விற்பனையின் அடிப்படையில் இந்த 3 ஸ்கூட்டர்கள் அதிக அளவில் விற்பனை (Best Scooters in India ) ஆகியுள்ளன. எனவே இந்த மூன்று ஸ்கூட்டர்கள் பற்றி முக்கியமாக இங்கே பார்க்கலாம். இந்த மூன்று சிறந்த ஸ்கூட்டர்களின் முழுமையான விவரங்களை தெரிந்துக்கொள்ளுங்கள். 


1. ஹோண்டா ஆக்டிவா (Honda Activa): 
இது ஹோண்டா (Honda) ஸ்கூட்டர் நிறுவனத்தின் சிறந்த விற்பனையாகும் ஸ்கூட்டர் ஆகும். ஹோண்டா இந்த ஸ்கூட்டரை 100 சிசி மற்றும் 125 சிசி உள்ளிட்ட இரண்டு வகைகளில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நிறுவனம் ஏப்ரல் வரை 1,09,678 லட்சம் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. இதன் காரணமாக இந்த ஸ்கூட்டர் விற்பனையைப் பொறுத்தவரை இந்தியாவில் முதலிடத்தில் உள்ளது.


2. சுசுகி அக்செஸ் 125 (Suzuki Access 125): 
சுசுகி நிறுவனத்தின் சிறந்த விற்பனையான ஸ்கூட்டர் என்பதை சுசுகி அக்செஸ் 125 நிரூபித்துள்ளது. இது ஸ்கூட்டர் குறைந்த எரிபொருள் செலவில் அதிக கிலோமீட்டர் இயங்குகிறது என்று நிறுவனத்தின் மைலேஜ் கூறுகிறது. ஏப்ரல் மாதத்தில் 53,285 சுசுகி அக்செஸ் ஸ்கூட்டர்கள் விற்பனை ஆகியுள்ளன. நாட்டில் ஸ்கூட்டர் விற்பனையைப் பொறுத்தவரை ஹோண்டா ஆக்டிவாவுக்குப் பிறகு இது இரண்டாவது இடத்தில் உள்ளது.


3. டி.வி.எஸ் ஜூபிடர் (TVS Jupiter):
டி.வி.எஸ் (TVS) நிறுவனத்தில் அப்பாச்சி பைக்கிற்குப் பிறகு அதிகம் விற்பனையாகும் இரு சக்கர வாகனம் டி.வி.எஸ் ஜூபிடர் ஸ்கூட்டர் ஆகும். கடந்த சில நாட்கள் வரை, இந்த ஸ்கூட்டர் விற்பனையைப் பொறுத்தவரை ஹோண்டா ஆக்டிவாவுக்குப் பிறகு இரண்டாவது இடத்தில் இருந்தது. ஆனால் சமீபத்திய தரவுகளின்படி, இந்த ஸ்கூட்டர் சுசுகி அக்செஸ் வாகனத்திற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்திற்கு வந்துள்ளது.


ஏப்ரல் மாதத்தில் டி.வி.எஸ் ஜூபிடர்  25,570 ஸ்கூட்டரை விற்றுள்ளது. இதன் காரணமாக இது நாட்டில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர்களின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.


ALSO READ |  ஹோண்டா கார்கள் மீது சிறப்பு தள்ளுபடி, விலை, அம்சங்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil  என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR