சில நேரங்களில் திடீரென்று பணம் தேவைப்படும் சூழ்நிலை வரும். அத்தகைய சூழ்நிலையில், ஒருவரின் பிரதான முயற்சி தனிநபர் கடன் வாங்குவதாக இருக்கும். ஆனால், ஒரே ஒருமுறை மட்டுமே வாங்கக்கூடியதாக இருக்கும் தனிநபர் கடன், மற்ற சூழ்நிலைகளில் உதவியாக இருக்காது. ஆனால், உங்களுக்கு எல்ஐசியில் ஆயுள் காப்பீடு இருந்தால், அவசர தேவைக்கு கடன் வாங்கலாம். அதற்காக மாதாந்திர EMI எல்லாம் செலுத்த வேண்டியதில்லை. ஒரே நிபந்தனை என்னவென்றால், அந்த பாலிசியின் வருடாந்திர பிரீமியம் குறைந்தது 3 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் கடனை உங்களால் பெற முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | Vodafone Idea: 150 ஜிபி போனஸ் டேட்டா: வோடோஃபோன் ஐடியாவின் சூப்பர் பிளான்


ஒருவர் எவ்வளவு கடன் பெறலாம்


பொருளாதார விவகார ஆலோசகர் தீப்தி பார்கவா கூறுகையில், பாலிசியின் பிரீமியத்தை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் டெபாசிட் செய்திருந்தால், டெபாசிட் செய்யப்பட்ட பிரீமியத்தில் 44 சதவீதம் வரை கடனாகப் பெறலாம். பிரீமியத்தின் கீழ் நீங்கள் ஆண்டுக்கு 60 ஆயிரம் ரூபாய் செலுத்துகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், இதன்படி மூன்று ஆண்டுகளில் 1,80,000 ஆயிரம் ரூபாய் டெபாசிட் செய்திருப்பீர்கள். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் 44% வீதத்தில் ரூ.79,200 கடனாகப் பெறலாம். அதேபோல, டெபாசிட் செய்யப்பட்ட பிரீமியத்துக்கு ஏற்ப கடன் தொகை அதிகரிக்கிறது.


மாதாந்திர EMI இல்லை


எல்ஐசி பாலிசியில் வாங்கிய கடனுக்கு 10 சதவீத வருடாந்திர வட்டி கட்ட வேண்டும். இந்த வட்டி ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் உருவாக்கப்படுகிறது. ஆனால் இங்கே உங்களுக்கு நல்ல விஷயம் என்னவென்றால், இந்தக் கடனில் ஒவ்வொரு மாதமும் EMI செலுத்த தேவையில்லை. பணம் இருக்கும்போது அதற்கேற்ப தவணை செலுத்தலாம். செலுத்தும் காலத்துக்கு ஏற்ப வட்டியும் கொடுக்க வேண்டியிருக்கும். 


மேலும் படிக்க | iPhone 14 Launch Offers: ரூ.80 மதிப்புள்ள ஐபோன் 14-க்கு காஷ்பேக் ஆஃபர் இவ்வளவா?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ