iPhone 14 Launch Offers: ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் 14-க்கு காஷ்பேக் ஆஃபர் இவ்வளவா?

ஐபோன் 14 அறிமுகத்தையொட்டி வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்காத அளவுக்கான காஷ்பேக் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.   

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 8, 2022, 07:57 PM IST
  • ஆப்பிள் ஐபோன் 14 சிறப்பம்சங்கள்
  • விலை உள்ளிட்ட சலுகை விவரம் இதோ
iPhone 14 Launch Offers: ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள ஐபோன் 14-க்கு காஷ்பேக் ஆஃபர் இவ்வளவா? title=

iPhone 14 Price List And Offers: Apple iPhone 14 சீரிஸ் இந்தியா உட்பட பல நாடுகளின் ஸ்மார்ட்போன்கள் மார்க்கெட்டில் களமிறங்க உள்ளது. புதிய சீரிஸில் iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro மற்றும் iPhone 14 Pro Max என நான்கு மாடல்கள் உள்ளன. 

 iPhone 14 மற்றும் iPhone 14 Plus விலை

இந்தியாவில் இருக்கும் ஐபோன் வாடிக்கையாளர்கள் ஐபோன் 14, 128ஜிபி வேரியண்ட்டை ரூ.79,900-க்கும், 256ஜிபி மாறுபாட்டை ரூ.89,900-க்கும் வாங்கலாம். 512 ஜிபி வேரியண்டை ரூ.1,09,900-க்கு வாடிக்கையாளர்கள் வாங்கிச் செல்ல முடியும். ஐபோன் 14 பிளஸை ரூ.89,900-க்கு வாங்கலாம். ஐபோன் 14 விற்பனை செப்டம்பர் 16 முதல் தொடங்கும். ஐபோன் 14 பிளஸ் விற்பனை அக்டோபர் 7 முதல் தொடங்கும்.

மேலும் படிக்க: ரூ.20 ஆயிரத்துக்குள் இருக்கும் பெஸ்ட் 5ஜி ஸ்மார்ட்போன்கள்

iPhone 14 Pro மற்றும் iphone 14 Pro மேக்ஸ் விலை

iPhone 14 Pro 128GB வேரியண்ட் விலை ரூ.1,29,900. 256GB வேரியண்ட் விலை ரூ.139,900. 512GB வேரியண்டின் விலை ரூ.159,900. 1TB ஐபோன் வேரியண்ட்டின் விலை ரூ.179,900. கடந்த ஆண்டு வெளியான ஐபோன் 13 ப்ரோவை விட 10,000 ரூபாய் அதிகம். iPhone 14 Pro Max 1,39,900 ரூபாயில் இருந்து தொடங்குகிறது. இது 2021 முதல் iPhone 13 Pro Max-ஐ விட 10,000 ரூபாய் அதிகம். 256ஜிபி வகையின் விலை ரூ.149,900 ஆகும். 512ஜிபி மாறுபாடு ரூ.169,900. 1டிபி வேரியண்டின் விலை ரூ.189,900. இந்த போன்களின் விற்பனை செப்டம்பர் 16 முதல் தொடங்குகிறது. இன்று முதல்  முன்பதிவு செய்யலாம்.

iPhone 14 சலுகைகள்

ரூ.54,900-க்கு மேல் உள்ள சீரீஸ் ஆப்பிள் போன்களை வாங்கினால் ரூ.6,000 வரை 5% உடனடி கேஷ்பேக்கை Apple.com வழங்குகிறது. இதே சலுகை iPhone 14 வரிசைக்கும் பொருந்தும். வாடிக்கையாளர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் iPhone 14 போனை வாங்கலாம். ஐபோன் 14/14 பிளஸ்/14 ப்ரோ/14 ப்ரோ மேக்ஸை, டிரேட்-இன் மூலம் வாங்க விரும்பும் வாங்குபவர்களுக்கு ஆப்பிள் ரூ.2,200 முதல் ரூ.58,730 வரை கிரெடிட்டை வழங்குகிறது. ஐபோன் 14 ப்ரோ மற்றும் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு புதிய சந்தாவுடன் ஆப்பிள் ஆர்கேட் மூன்று மாதங்கள் கிடைக்கும்.

மேலும் படிக்க: Redmi: குறைந்த விலையில் களமிறங்கும் புதிய ஸ்மார்ட்போன்; ரெட்மி பிளான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News