Long Living Mouse: பொதுவாக, எலிகளின் ஆயுள் அதிகபட்சம் இரண்டு ஆண்டுகள் தான்.ஆனால் கலிபோர்னியாவில் உள்ள சான் டியாகோ உயிரியல் பூங்காவில் 9 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் வாழ்ந்த எலி கின்னஸ் சாதனையில் இடம் பெறுகிறது. இந்த எலியே, இதுவரை உலகில் வாழ்ந்த எலிகளில் அதிக வயதுடைய எலி என்பது குறிப்பிடத்தக்கது. எனவே இந்த எலி தொடர்பான விஷயங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகிறது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சான் டியாகோ மிருகக்காட்சிசாலையில், 9 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்த பசிபிக் பாக்கெட் எலி இப்போது உலகிலேயே மிக வயதான எலி என்று நம்பப்படுகிறது. உலகிலேயே மிகவும் அதிக நாள் வாழ்ந்த எலி என்று நம்பப்படும் பசிபிக் பாக்கெட் எலிக்கு கின்னஸ் உலக சாதனை அங்கீகாரம் கிடைக்கப் போவதாக சான் டியாகோ உயிரியல் பூங்காவின் அதிகாரிகள் தெரிவித்தனர்.


2013ம் ஆண்டு ஜூலை 12ம் தேதியன்று உயிரியல் பூங்காவில் பிறந்த எலிக்கு, நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட்டின் (Patrick Stewar) நினைவாக பாட் (Pat) என்று பெயரிடப்பட்டது. இந்த சிறப்பான எலியின் நீண்ட ஆயுளைக் கொண்டாடும் வகையில் பிப்ரவரி 8 ஆம் தேதி ஒரு சிறப்பு நிகழ்வை நடத்தப்போவதாக வனவிலங்குக் கூட்டமைப்பு கூறியது.


மேலும் படிக்க | குளிக்கும்போது சிறுநீர் கழித்தால் இவ்வளவு பிரச்சனையா? வடிவேலு காமெடியை மறக்கலையே?


மனிதப் பராமரிப்பில் வாழும் பழமையான எலி என்ற கின்னஸ் உலக சாதனையும் இந்த எலி பெறும் என்று கூறப்படுகிறது. இந்த எலியின் வயதை சரிபார்க்க GWR நடுவர் நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார்.


பசிபிக் பாக்கெட் மவுஸ் என்பது வட அமெரிக்காவில் உள்ள எலிகளின் மிகச்சிறிய இனமாகும், அருகி வரும் இந்த இனத்தின் வீழ்ச்சியை ஈடுசெய்ய உதவும் வகையில் 2012 ஆம் ஆண்டில் மிருகக்காட்சிசாலையானது இனப்பெருக்கத்தை அதிகரிக்கும் திட்டத்தை நிறுவியது.


கின்னஸ் உலக சாதனைகளால் பதிவுசெய்யப்பட்ட எலி சுட்டி ஃபிரிட்ஸி, அது1985ஆம் ஆண்டு, தன்னுடைய 7 வயது மற்றும் 7 மாதங்களில் இறந்தது.


எலிகளைப் பற்றி உங்களுக்குத் தெரியாத பல சுவாரஸ்யமான உண்மைகள் உள்ளன. பூமியிலிருந்து விண்வெளிக்கு அனுப்பப்பட்ட முதல் உயிரினங்களில் எலிகளும் அடங்கும். தவிர, எலிகளைப் பற்றிய மற்றொரு ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், தண்ணீரின்றி வாழும் திறன் கொண்டவை என்பதும் நீர் அருந்தாமல் அதிக நாள் வாழ்வதில் ஒட்டகத்தை விட அதிக திறன் படைத்தவை.


மேலும் படிக்க | Radioactive Danger: கதிரியக்க காப்ஸ்யூல் கிடைச்சிடுச்சு! நிம்மதி பெருமூச்சுவிடும் ஆஸ்திரேலியா


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ