மனிதரை சுற்றும் மெகா மலைப்பாம்பு! காலைச் சுற்றிய பாம்பை கையால் அடக்கும் வீரர்! வைரல் வீடியோ

Saving Python Viral Video: இவருக்கு பாம்பு பாஷை தெரியுமா? இருக்கும் இருக்கும்... இல்லைன்னா இவ்வளவு தைரியம் இருக்குமா? வைரலாகும் மலைப்பாம்பு வீடியோ

Written by - Malathi Tamilselvan | Last Updated : Feb 1, 2023, 04:10 PM IST
  • உதவிக்கு தான் வந்திருக்கேன்! உபத்ரவம் செய்யமாட்டேன்...
  • பாம்புடன் பேசும் பாம்புபிடி வீரர்
  • பாம்பு பாஷை இவருக்கு தெரியுமோ?
மனிதரை சுற்றும் மெகா மலைப்பாம்பு! காலைச் சுற்றிய பாம்பை கையால் அடக்கும் வீரர்! வைரல் வீடியோ title=

பாம்பு பிடிக்கும் வைரல் வீடியோ: இணையதளம் இன்று நமது நேரத்தை முழுமையாக ஆக்ரமித்துவிடுகிறது என்பதால், இணையதளம், டேட்டா, ஜிபி, அப்லோட், டவுன்லோட் என பல வார்த்தைகள் அனைவரும் அடிக்கடி சொல்லும் வார்த்தைகளாகிவிட்டது. இண்டர்நெட் என்பது தனி உலகம் என்பதும், எங்கோ ஓரிடத்தில் நடக்கும் செயல்கள் என்பதும் நமக்கு மறந்துபோய், உலகமே நமக்கு தெரியும் என்ற எண்ணத்தை உண்டாக்குகிறது. உலக விஷயங்களை பற்றி தெரிந்துகொள்ள உதவும் இணையதளமும், சமூக ஊடகங்களும் என்ன விஷயம் எங்கு நடந்தாலும், அதை உடனே நமக்கு கொண்டு வந்து சேர்த்துவிடுகிறது.

செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் உடனுக்குடன் பகிரப்பட்டு, நமக்கு பொழுதுபோக்கவும், பயனுள்ள தகவல்களை கொடுக்கும் ஊடகங்களை சரியாக பயன்படுத்தினால் அது வாழ்க்கைக்கு நல்லதே.  சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. கற்பனை செய்து முடியாக சில விஷயங்களையும், பார்க்க முடியாத அனைத்தையும் நமது கைக்குள் உடனுக்குடனே கொண்டு வந்து கொடுக்கும் மொபைல் இல்லாவிட்டால் வாழ்க்கையே ஸ்தம்பித்துவிடுகிறது.

அதில் வரும் வீடியோக்களில் பல, நம்மை சில சமயங்களில் அதிர்ச்சியடைய வைக்கின்றன. அதிலும் விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்த வீடியோவைப் பார்த்தால் அதற்கான காரணம் உங்களுக்கே தெரிந்துவிடும்.

மேலும் படிக்க | Dicky Snake: டிக்கிக்குள் டிக்கிலோனா செய்யும் பாம்பு! லந்து பண்ணும் பாம்பை லபக்கிய நபர்

இந்த பிரம்மாண்டமான மலைப்பாம்பை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர விரும்பும் பாம்புபிடி வீரரின் சாகசம், சமூக ஊடகங்களில் பரவலாக விரும்பப்படுகிறது. காட்டு விலங்குகளின் வீடியோக்கள் மட்டுமல்ல, இதுபோன்ற அச்சுறுத்தும் வீடியோக்களும் லைக்குகளை அள்ளுகின்றன. இந்த வீடியோவை பார்க்கும்போது, தைரியமும் முன்னெச்சரிக்கையும் காட்டிற்கு செல்லும் மனிதர்களுக்கு எவ்வளவு அவசியம் என்பதை புரிய வைக்கிறது.

மலைப்பாம்பை லாவகமாக பிடிக்க பாம்புபிடி வீரர் செய்யும் முயற்சிகளும், விடாமல் அவரை தாக்கும் பாம்பின் வீடியோ திகிலை கொடுக்கிறது.  

மேலும் படிக்க | வகுப்பறையில் இப்படியா செய்றது..மாணவ - மாணவியின் வைரல் வீடியோ

ராட்சத மலைப்பாம்பு வீடியோ 
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், காட்டுக்குள் மலைப்பாம்பு ஒன்றை பிடிக்க பிரயத்தனம் செய்யும் நபரின் முயற்சிகள் ஆச்சரியம் அளிக்கின்றன. கரணம் தப்பினால் மரணம் என்பதைத் தெரிந்தே அவர் இந்த வேலையை செய்கிறார் என்பதும், கட்டுமஸ்தாக இருக்கும் அவரின் கட்டுக்குள் அடங்க மறுக்கும் பாம்பின் முயற்சிகளையும் இந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

ராட்சத மலைப்பாம்பு, தன்னை பிடிப்பவரை பிடிக்க முயற்சிப்பதையும், அதை அவர் லாவகமாக சமாளிப்பதையும் பார்த்தால் ஆச்சரியமும், அச்சமும் சேர்ந்தே வருகிறது. பாம்புக்கு, தன்னை அவர் தாக்குகிறார் என்ற எண்ணம் தோன்றி இருக்குமோ? பாம்பின் மனது நமக்குத் தெரியாதே? இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பல்வேறு தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் படிக்க | Viral Video: சாப்பிடு செல்லம்! ஆமை நண்பனைக் கொஞ்சும் சிம்பன்சி வீடியோ வைரல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News