ராமாயண இதிகாசத்தில் வரும் பகவான்  ஹனுமான் அதிக சிறப்புகளைக் கொண்டவர். ராமபிரானின் மிகச்சிறந்த பக்தனாகவும், தூதனாகவும் இருந்தவர் அனுமன். இந்தியாவில் பெருமாளுக்கு நிகராக, ஆஞ்சநேயருக்கும் ஏராளமான கோவில்கள் அமையப் பெற்றுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இராமாயணத்தில் இராமனின் மிக முக்கியமானதொரு பாத்திரமாக வானரப் படையில் இடம் பெறுகிறார். ஹனுமானுக்கு அனுமன் மாருதி, ஆஞ்சநேயன் போன்ற பெயர்களும் உள்ளன.


பொதுவாக செவ்வாய்க் கிழமை அனுமனுக்கு உகந்த நாள் ஆகும். இந்த நாளில் விரதமிருந்து ராகு காலத்தில் எலுமிச்சை விளக்கு போட்டு வந்தால் வாழ்க்கையில் அனைத்து செல்வங்களையும் பெற்று வளம் பெறலாம். 


வட நாட்டில் பொதுவாக குங்குமப்பூ நிறத்தில் சித்தரிக்கப்படுகிறார். ஏன்னென்றால் இந்த சிந்தூர் ஆற்றல் மற்றும் உயிராற்றலின் நிறம். மற்றொரு காரணம், ஒரு நாள் சீதை தன் நெற்றி உச்சியில் சிந்தூரைத் தடவிய போது, அதைக் கண்ட ஆஞ்சனேயர் சீதையிடம் ஏன் என்று கேட்டார். அதற்கு சீதை, இது ராம பிரான் நீண்ட காலம் வளமாக வாழ இருக்க  செய்யும் ஓர் செயல் என்று கூறினார். இதைக் கேட்ட அனுமன் உடனே தன் உடல் முழுவதும் இந்த சிந்தூரைத் தடவிக் கொண்டார் என புராணக் கதைகள் கூறுகின்றன.


மேலும் படிக்க | Solar Eclipse: கிரகணத்தின் போது சூரியனின் அருளைப் பெற செய்ய வேண்டியவை


செவ்வாய் கிழமை ஆஞ்சநேயருக்கு மிக உகந்த நாளாக கருதப்படுகிறது. இதற்கு ஒரு சிறப்பான காரணம் உள்ளது. இதற்கான காரணம் ஸ்கந்த புராணத்தில் கூறப்பட்டுள்ளது. இதன்படி, ஹனுமான் செவ்வாய்க்கிழமை பிறந்ததால், செவ்வாய் கிழமை அவரை வழிபட உகந்தது என கூறப்படுகிறது.  செவ்வாய்கிழமை ஆஞ்சநேயரை பூஜிக்கும் போது வாழ்வின் எல்லா பிரச்சனைகளையும் நீக்கி விடும். இந்த நாளில் அனுமன் சாலிசா படிப்பதும், சுந்தரகாண்டம் பாராணம் செய்வதும் மிகுந்த பலன் தரும்.


செவ்வாய்க் கிழமைகளில் பகவான் ஹனுமானை வழிபடும் முறைகள்:


1.  செவ்வாய் கிழமைகளில் அனுமனுக்கு துளசி மாலையை அணிவித்து வணங்குவது நல்லது. பின் அந்த துளசி இலைகளை சாப்பிடலாம்.


2. முக்கோண வடிவமுள்ள சிவப்பு கொடியில் ‘ராம்’ என்று எழுதி, அனுமனுக்கு சாற்றி வணங்கினால் வீட்டில் பணம் கொழிக்கும்.


3. அனுமனுக்கு தொடர்ச்சியாக ஆரஞ்சு நிற சிந்தூர குங்குமம் வைத்து வந்தால் மாங்கல்ய தோஷம் நீங்குவதோடு, இதர தோஷங்களும் அகலும்.


4. செவ்வாய் கிழமைகளில் அனுமனுக்கு லட்டு, சுண்டல், வெல்லம், கொய்யாப்பழம் போன்றவற்றை படைத்து வணங்கினால், அனுமனின் அருள் முழுமையாக  கிடைக்கும் என்பது நம்பிக்கை.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | Astro: அனைவரையும் காந்தம் போல் வசீகரிக்கும் திறன் பெற்ற ‘3’ ராசிக்காரர்கள்..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR