Astro: அனைவரையும் காந்தம் போல் வசீகரிக்கும் திறன் பெற்ற ‘3’ ராசிக்காரர்கள்..!!

சிலருக்கும் அனைவரையும் சிரிக்க வைக்கும் திறமை சிலருக்கு இருக்கும். அவரை கண்டு பைத்தியமாக்கும் அளவுக்கு அவருடைய வார்த்தைகளும், செயல்களும் இருக்கும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 29, 2022, 10:49 AM IST
Astro: அனைவரையும் காந்தம் போல் வசீகரிக்கும் திறன் பெற்ற ‘3’ ராசிக்காரர்கள்..!! title=

சிலருக்கு அற்புதமான வசீகர திறன் இருக்கும். பிறரை காந்தம் போல ஈர்க்கும் தன்மை இருக்கும். இதற்குப் பின்னால், அவர்களின் இயல்பு-நடத்தை, பேசும் பாங்கு, வாழும் முறை போன்றவையே காரணம். ஜோதிட சாஸ்திரத்தில் இப்படிப்பட்டவர்களின் ராசியும் இதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரத்தின் படி, 3 ராசிக்காரர்கள் மிகவும் வசீகர தன்மையுடன் இருப்பதால், மக்கள் மிக விரைவாக அவர்கை நோக்கி ஈர்க்கப்பட்டு அவர்களின் ரசிகர்களாக மாறுகிறார்கள்.

மேஷம்: மேஷ ராசிக்காரர்கள் மிகவும் வேடிக்கையாக பேசும் திறன் கொண்டவர்களாக இருப்பார்கள், எப்போதும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் வாழ்க்கையை முழுமையாக அனுபவிக்கிறார்கள். அவர்களுடன் வாழ்பவர்களும் எப்போதும் மகிழ்ச்சியில் திழைப்பதைக் காணலாம். அவருடைய இந்த குணத்தால் மக்கள் அவரை நோக்கி பெரிதும் ஈர்க்கப்படுகின்றனர். 

மேலும் படிக்க | அபூர்வ நிகழ்வு! 2022 ஏப்ரலில் 9 கிரகங்களும் ராசி மாறுவதால் ஏற்படும் பலன்கள்!

ரிஷபம்: ரிஷப ராசிக்காரர்கள் மிகவும் நேர்மறையாகவும், மகிழ்ச்சியாகவும், வேடிக்கையாக பழகுபவர்களாகவும் இருப்பார்கள். எங்கு சென்றாலும் இவர்களை நோக்கி ஒரு கூட்டம் இருக்கும். அனைவரின் முகத்திலும் சிரிப்பை கொண்டு வரும் வகையில் அவரது பேச்சு நடை உள்ளது. இவர்களும் மிகவும் புத்திசாலிகள். மொத்தத்தில், எல்லோரையும் தன் மீது பைத்தியமாக ஆக்குவதற்கு போதுமான அனைத்து குணங்களும் இந்த ரிஷப ராசிக்காரர்களிடம் உள்ளன.

தனுசு : தனுசு ராசிக்காரர்களும் மகிழ்ச்சியான இயல்புடையவர்கள். இந்த மக்கள் பேசும் கலையில் திறமையானவர்கள், இதன் காரணமாக அவர்கள் எளிதில் மக்களை தங்கள் பக்கம் ஈர்க்கிறார்கள். அவர்கள் எங்கு சென்றாலும் கவர்ச்சியின் மையமாக மாறுகிறார்கள்.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இந்த 4 ராசிக்காரர்களும் எதிர்பார்த்த வெற்றியைப் பெறுவார்கள் 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News