சனி தோஷம்: ஜோதிடத்தில் ஒவ்வொரு கிரகத்திற்கும் ஒரு முக்கியத்துவம் உண்டு. ஒரு கிரகம் தனது நிலையை மாற்றும் போதெல்லாம், அதன் சுப மற்றும் அசுப பலன்களை மனிதர்கள் அனுபவிக்க நேரிடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒரு கிரகம் தனது நிலையிலிருந்து மாறும் போது, அது நிச்சயமாக சில அறிகுறிகளை அளிக்கிறது. இதேபோல், சனி பகவானும் தனது நிலையை மாற்றும்போது, ​​​​பல வகையான அறிகுறிகளைக் கொடுக்கிறார். இந்த அறிகுறிகளை சரியான நேரத்தில் கண்டறிவதன் மூலம், அவற்றின் விளைவுகளை குறைக்க முடியும். சனி பகவான் அளிக்கும் சங்கேதங்கள் மற்றும் அவற்றுக்கான பரிகாரங்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். 


சனி பகவான் இந்த அறிகுறிகளை வழங்குகிறார் 


- ஒரு நபரின் ஜாதகத்திலும் சனியின் அசுப பலன்கள் தொடங்கினால், அந்த நபர் உடல் மற்றும் நிதி சிக்கல்களைச் சந்திக்கத் தொடங்குகிறார்.


- ஜாதகத்தில் சனி பகவானின் தோஷங்கள் இருந்தால், அந்த நபரின் வாழ்க்கையில் பணிச்சுமை அதிகரிக்கத் தொடங்குகிறது. மற்றும் விருப்பமின்றியும் அந்த நபர் பல வித பணிகளை செய்ய வேண்டி வருகிறது. 


- ஜாதகத்தில் சனி பகவான் நுழைந்தவுடன் அசுப பலன்கள் தொடங்கும். இதனால், அந்த நபர் கோபப்படத் தொடங்குகிறார். ஆன்மீக பணிகளில் ஈடுபாடு குறையும். கெட்ட பழக்கங்களில் சிக்கிக் கொள்ளும் வாய்ப்பும் உள்ளது. 


- ஒரு நபரின் ஜாதகத்தில் சனியின் அசுப பலன்கள் தொடங்கியவுடனேயே அவர் ஏதாவது பொய் வழக்கில் சிக்கிக் கொள்கிறார். இதனால் அந்த நபரின் மானமும் மரியாதையும் குறைய ஆரம்பிக்கிறது.


மேலும் படிக்க | மீண்டும் ராசி மாறுகிறார் சனி பகவான்: இந்த ராசிகளுக்கு பெரிய நிவாரணம் 


- சனியின் அசுப பலன் காரணமாக, ஒரு நபர் வேலையில் பல தடைகளை சந்திக்க நேரிடும். பல நேரங்களில் அந்த நபரின் வேலை போய்விடும் நிலைகூட வரலாம்.


- சனி பகவானின் அசுப பலன் ஒருவர் மீது இருந்தால், விலங்குகளால் தாக்கப்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது. கடுமையான காயங்கள் ஏற்படலாம். 


மோசமான விளைவுகளை குறைக்கும் பரிகாரங்கள்


- ஜாதகத்தில் இருக்கும் சனி தோஷத்தைக் குறைக்க, சனிக்கிழமை மாலை சனிபகவானுக்கு கடுகு எண்ணெய், எள் எண்ணெயால் அபிஷேகம் செய்யலாம். மேலும், இந்த எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றவும்.


- இந்த நாளில் இரும்பு பொருட்கள், கருப்பு ஆடைகள், உளுந்து, கடுகு எண்ணெய், பாதணிகள் போன்றவற்றை தானம் செய்வது சிறப்பு வாய்ந்தது.


- சனிக்கிழமைகளில் மீன்களுக்கு உணவளிப்பது நன்மை தரும். இது சனி தோஷத்தின் தாக்கத்தை குறைக்கிறது.


- சனிக்கிழமை காலை குளித்த பின், அரச மரத்தின் வேருக்கு நீர் ஊற்றுங்கள். மாலையில் எள் அல்லது கடுகு எண்ணெய் கொண்டு தீபம் ஏற்றவும். கருப்பு எள்ளை விளக்கில் போடலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ஆயுளை நிர்ணயிக்கும் சனீஸ்வரர்: எந்த பாவகத்தில் சனி இருந்தால் தீர்க்காயுசு 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR