ஆயுளை நிர்ணயிக்கும் சனீஸ்வரர்: எந்த பாவகத்தில் சனி இருந்தால் தீர்க்காயுசு
ஆயுட்காரகர் என்று பெயர் பெற்ற சனீஸ்வரர் தான் ஒருவரின் ஆயுளை நிர்ணயிப்பவர்... பத்தாம் பாவகத்தில் உள்ள கிரகங்களுடன் சூரியனின் தொடர்பும் ஒருவரின் ஆயுளை குறைக்கலாம்
புதுடெல்லி: ஒருவரின் ஜாதகத்தில் எட்டாம் பாவகம், ஆயுள் பாவகம் என்று ஜோதிடம் சொல்கிறது. ஆயுட்காரகர் என்று பெயர் பெற்ற சனீஸ்வரர் தான் ஒருவரின் ஆயுளை நிர்ணயிப்பவர் ஆவார்.
ஒரு ஜாதகத்தில் ஒன்பதாம் பாவகத்தைத் தவிர, பத்தாம் பாவகத்தில் உள்ள கிரகாதிபதியுடன் சூரிய பகவானை தொடர்புபடுத்தி, ஒருவரின் ஆயுளைச் சொல்லலாம். ஒருவரின் ஜாதகத்தில் 10, 11, 3, 6 ஆகிய இடங்களில் சூரியன் இருந்தால் ஆயுள் தீர்க்கமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
லக்னாதிபதியும் அஷ்டாமதிபதியும் பத்தாமிடத்தின் அதிபதியும் சூரியனுடன் கூடி அதுவும் கேந்திரத்தில் இருந்தால், ஜாதாகருக்கு தீர்க்க ஆயுள் என்று சொல்லலாம்.
சனீஸ்வரர் தான் ஆயுள்காரகன் என்றாலும் ஏனைய கிரஹங்களும் ஒரு ஜாதகரின் ஆயுள் நாட்களை நிர்ணயிப்பதில் பங்கு வகிக்கின்றார்கள். ஆனால், நவக்கிரகங்களில் நீதிபதி என்று பெயர் பெற்ற சனீஸ்வரரே ஒருவரின் ஆயுளை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிக்கிறார்.
கிரகங்களின் இருப்பையும் தொடர்பையும் வைத்து ஆயுளை கணக்கிடுவதை கிரஹதத்தாயுர்தயம் என்று சொல்வார்கள். ஒவ்வொரு கிரஹமும் உச்ச நீச்ச காலங்களுக்கு ஏற்ப ஜாதகருக்கு ஆயுளை கூட்டியும் குறைத்தும் பணியாற்றுகிறார்கள்.
மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி; 3 ராசிக்கு லாபம், 3 ராசிக்கு நஷ்டம்
ஆயுள் தொடர்பான நன்மை தீமைகளைக் கணக்கிடுவதில், சக்ரபாத ஹரணம், சதுர்ஷேத்ர ஹரணம், அஸ்தங்க ஹரணம், க்ரோதய ஹரணம் என நான்கு ஹரணங்கள் உண்டு.
இரண்டாம் மற்றும் ஏழாம் அதிபதி தவிர இந்த பாவக அதிபதிகளோடு ஒரு பாவக் கிரகம் வலிமையுடன் பார்வை அல்லது சேர்க்கை வழியாக தொடர்பில் இருந்தால் அந்த கிரகத்தையும் மாரகக் காரகன் என்று சொல்லலாம்.
கோச்சாரத்துடன் இணைந்துள்ள கிரகங்களின் தீர்க்க ரேகை பாகைகளில் ஜாதகரின் ஜனன ஜாதகத்தில் சனீஸ்வரர் இருக்கும் இடத்துடன் தொடர்புகளும் ஆயுளை நிர்ணயிக்கிறது. அதில் ஏழு விஷயங்கள் முக்கியமானவை.
1. ஒருவரின் லக்னம் வலிமையாக இருந்தால் அது, அம்சக ஆயுர்தாயம்
2. சூரியன் வலிமையாக இருந்தால் பிண்டக ஆயுர்தாயம்
3. சந்திரன் வலிமை பெற்றிருந்தால் நைசார்கிக ஆயுர்தாயம்
4. செவ்வாய் வலிமை கொண்டிருந்தால் பிண்டாஷ்டக ஆயுர்தாயம்
5. புதன் வலிமை எனில் ராசி மஜ ஆயுர்தாயம்
6. குரு வலிமையாக இருந்தால் நட்சத்திர ஆயுர்தாயம்
7. சுக்கிரன் வலிமை எனில் கால சக்ர ஆயுர்தாயம்
8. சனி வலிமையாக இருந்தால் அம்சக ஆயுர்தாயம்
மேலும் படிக்க | சனியின் ராசி மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணமழை பொழியும்
தீர்க்காயுசு என்பதன் பொருள் 100 வயது வாழ்வது ஆகும். ஒருவருக்கு அல்பாயுசு, மத்திம ஆயுள், தீர்காயுசு என மூன்று வகையாக சொல்வார்கள்.
இது எப்படி கணக்கிடப்படுகிறது?
தீர்க்காயுசு எனப்பதும் 100 வயதை மூன்றாகப் பிரிக்க வேண்டும்.
அதாவது 1-33, 34-66 , 67-100 என பிரிப்பது. இதில் 1 முதல் 33 வயதிற்குள் இறப்பவர்கள், அல்பாயுசுக்காரர்கள் என்று ஜோதிடம் கருதுகிறது.
அதேபோல, 34 வயது முதல் 66 வயது வரை ஆயுள் உள்ளவர்கள் மத்திம ஆயுசுக்காரர்கள், 67 வயதுக்கு மேல் ஆயுள் உள்ளவர்களை தீர்க்காயுசுக்காரர்கள் என்று ஜோதிடம் சொல்கிறது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR