LPG Booking Offer: பெட்ரோல்-டீசல் இன்று இந்த மாதத்தில் தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்ந்துள்ளது. எல்பிஜி சிலிண்டரும் ரூ .809 என்ற விலையில் விற்கப்படுகின்றது. பெட்ரோல் டீசல் விலை  எண்ணெய் நிறுவனங்களின் கைகளில் இருப்பதால் அவற்றில் நம்மால் எந்த தள்ளுபடியையும் பெற முடியாது. ஆனால், LPG அதாவது வீட்டு உபயோக சிலிண்டரின் விலையில் தள்ளுபடியைப் பெறலாம். அதுவும் முழு 800 ரூபாய் வரையிலான தள்ளுபடியை நீங்கள் பெற முடியும். அதை எப்படி பெறுவது என இங்கே காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

LPG சிலிண்டரில் ரூ .800 வரை தள்ளுபடி!


இந்த மாதத்தில் LPG முன்பதிவு மற்றும் கட்டணம் செலுத்துதல் குறித்து பேடிஎம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு பம்பர் சலுகையையும் வழங்கியுள்ளது. இந்த சலுகையின் கீழ், வாடிக்கையாளர்கள் வெறும் ரூ .9 க்கு ரூ .809 மதிப்பிலான கேஸ் சிலிண்டரைப் பெற முடியும். இந்த கேஷ்பேக் சலுகையின் கீழ், ஒரு வாடிக்கையாளர் முதன்முறையாக Paytm செயலியின் மூலம் கேஸ் சிலிண்டரை முன்பதிவு செய்தால், அவர் 800 ரூபாய் வரை கேஷ்பேக் பெறலாம்.


Paytm இல் கேஷ்பேக் பெறுவது எப்படி


Paytm இன் இந்த சலுகையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், 2021 மே 31 வரை உங்களுக்கு வாய்ப்பு உள்ளது. இந்த சலுகைகள் முதல் முறையாக எல்பிஜி சிலிண்டர்களை Paytm மூலம் முன்பதிவு செய்து பணம் செலுத்தும் நுகர்வோருக்கு மட்டுமே கிடைக்கும். எல்பிஜி சிலிண்டருக்கு நீங்கள் முன்பதிவு செய்து பணம் செலுத்தும்போது, ​​சலுகையின் கீழ் ஒரு ஸ்க்ரேட்ச் கார்ட் உங்களுக்கு கிடைக்கும். இது ரூ .800 வரையிலான கேஷ்பேக்கை கொண்டிருக்கும். 


ALSO READ: WhatsApp மூலம் எல்பிஜி சிலிண்டர் புக் செய்வது எப்படி?


முதல் எல்பிஜி சிலிண்டரின் முன்பதிவில் (LPG Booking) இந்த சலுகை தானாகவே பொருந்தும். இந்த சலுகை குறைந்தபட்சம் 500 ரூபாய்க்கான கட்டணத்துக்கு மட்டுமே பொருந்தும். கேஷ்பேக்கைப் பெற நீங்கள் ஸ்க்ரேட்ச் கார்டை திறக்க வேண்டும். இது உங்களுக்கு பில்லுக்கான கட்டணத்தை செலுத்தியவுடன் கிடைக்கும். கேஷ்பேக்கில் உங்களுக்கு ரூ .10 முதல் ரூ .800 வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. இந்த ஸ்க்ரேட்ச் கார்டை 7 நாட்களுக்குள் நீங்கள் பயன்படுத்த வேண்டும். அதன் பிறகு நீங்கள் அதைப் பயன்படுத்த முடியாது.


இந்த வகையில் LPG புக்கிங் செய்யலாம் 


இந்த சலுகையை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள விரும்பினால், முதலில் உங்கள் மொபைல் தொலைபேசியில் Paytm செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, உங்கள் கேஸ் ஏஜென்சியிடம் சிலிண்டரை முன்பதிவு செய்யுங்கள். இதை செய்ய, Paytm செயலியில், Show more-ல் சென்று கிளிக் செய்யவும். அதன் பின்னர் Recharge and Pay Bills-ல் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, book a cylinder என்னும் ஆப்ஷனை நீங்கள் காண்பீர்கள். அதில் சென்று உங்கள் எரிவாயு வழங்குநரைத் தேர்ந்தெடுக்கவும். சிலிண்டர் புக் செய்வதற்கு முன்னர் FIRSTLPG இன் விளம்பர குறியீட்டை (Promo Code) உள்ளிட வேண்டும். முன்பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் கேஷ்பேக் ஸ்க்ரேட்ச் கார்டை நீங்கள் பெறுவீர்கள். இந்த ஸ்க்ரேட்ச் கார்டை 7 நாட்களுக்குள் பயன்படுத்த வேண்டும்.


ALSO READ: LPG Subsidy News: இதைச் செய்தால் உங்களுக்குப் பணம் கிடைக்கும்!


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR