கேஸ் சிலிண்டர் விலை: வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை இன்று அதிரடியாக அதிகரித்துள்ளது. சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.1968.50-ஆக உயர்ந்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலை அவ்வப்போது நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதத்தின் முதல் நாளில் வீட்டு பயன்பாடு மற்றும் வணிக பயன்பாடு கேஸ் சிலிண்டர்களின் விலை மாற்றம் செய்யப்படுகிறது.


இந்நிலையில் சென்னையில் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை (LPG Cylinder Price) உயர்ந்துள்ளது. அதன்படி, கடந்த மாதம் 1,942க்கு விற்பனையான வணிக பயன்பாட்டிற்கான  சிலிண்டர் விலை ரூ.26.50 உயர்ந்து ரூ.1968.50-ஆக விற்பனை செய்யப்படுகிறது. எனவே இந்த உயர்வானது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. இதனால் தற்போது கடைகளை வைத்திருப்போர் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.


மேலும் படிக்க | இந்தியர்களுக்கு இனி விசா வேண்டாம்... மலேசியாவுக்கு உடனடியாக டூர் பிளான் பண்ணுங்க


அதேநேரத்தில் வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் (14 KG Cylinder Price) விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. வீட்டு உபயோகத்துக்கான சிலிண்டர் ரூ.918.50க்கு விற்பனையாகிறது. கடந்த ஜூலை மாதம் முதல் தொடர்ந்து சரிந்துவந்த வணிக பயன்பாட்டு சிலிண்டரின் விலை மீண்டும் அக்டோபரில் உயர்ந்தது, ஆனால் கடந்த நவம்பர் மாதம் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ. 57 குறைத்து ரூ.1,942க்கு விற்பனை செய்யப்பட்டது.


பெருநகரங்களில் வணிக சிலிண்டர் விலை நிலவரம்:
தலைநகர் டெல்லியில் வர்த்தக சிலிண்டர் (Commercial LPG Cylinder) விலை ரூ.1796.50 ஆக அதிகரித்துள்ளது. நவம்பர் மாதத்தில் அவற்றின் விலை ரூ.1775.50 ஆகும்.


கொல்கத்தாவில் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.1,908 ஆகும். கடந்த மாதம் அவற்றின் விலை ரூ.1,885.50 ஆக இருந்தது.


மும்பையில் கடந்த மாதம் ரூ.1,728 ஆக இருந்த வர்த்தக சிலிண்டர் விலை ரூ.1,749 ஆக அதிகரித்துள்ளது.


சென்னையில் வர்த்தக சிலிண்டரின் விலை ரூ.1,968.50 ஆகவும், ஆகஸ்டில் அதன் விலை ரூ.1,942 ஆகவும் இருந்தது.


தேர்தல் மாநிலங்களிலும் கட்டணங்கள் அதிகரித்தன:
இதற்கிடையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் சிலிண்டர் விலை 1819 ரூபாய் உயர்ந்துள்ளது. இதேபோல், போபாலில் இன்று முதல் ரூ.1804.5 செலுத்த வேண்டும். தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் 19 கிலோ எடை கொண்ட கேஸ் சிலிண்டரின் விலை ரூ.2024.5 ஆக அதிகரித்துள்ளது. சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் இதற்கு ரூ.2004 செலுத்த வேண்டும். வர்த்தக சிலிண்டர்களின் விலையில் மட்டும் விலை அதிகரித்துள்ளது. வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


விலை மாற்றத்தின் விளைவு என்ன?
வணிக ரீதியான எல்பிஜி சிலிண்டர் விலை உயர்வு உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பிற வணிக நுகர்வோரை பாதிக்கும். இத்தகைய சூழ்நிலையில், இந்த உயர்வு வீட்டு உபயோக எல்பிஜி விலையை நேரடியாகப் பாதிக்காது. மறுபுறம், விமான எரிபொருள் விலையில் தொடர்ச்சியான குறைப்பு விமான கட்டணங்கள் குறைக்கப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், உள்நாட்டு வழித்தடங்களில் விமானப் பயணம் மலிவானதாக இருக்கும்.


மேலும் படிக்க | இன்று 'டிசம்பர் 1' முதல் எல்லாம் மாறப் போகுது.. புதுப்புது ரூல்ஸ் என்னென்ன?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ