இந்தியக் குடிமக்கள் இன்று முதல் (டிசம்பர்) முதல் தேதியிலிருந்து விசா இன்றி மலேசியாவுக்குப் பயணம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய குடிமக்களுக்கு visa-free entry வழங்கும் நாடுகளின் வரிசையில் மலேசியாவும் சேர்ந்துள்ளது. மலேசியாவிற்குச் செல்ல விரும்பும் இந்தியப் பயணிகள் இப்போது விசா சம்பிரதாயங்களின் தொந்தரவு இல்லாமல் தேசத்தை சுற்றிப் பார்க்கலாம்.
இது தொடர்பான அறிவிப்பு கடந்த கடந்த 26 ஆம் தேதி மக்கள் நீதிக் கட்சியின் கூட்டத்தில் எடுக்கப்பட்டது. மேலும் கூடுதல் சுற்றுலாப் பயணிகளை அனுமதிப்பதன் மூலம் அதிக அளவில் அந்நியச் செலாவணி வருவாயினை பெற முடியும் என்பதால் சீனா மற்றும் இந்தியாவில் இருந்து மலேசியாவுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இனி விசா தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் மலேசியாவில் தங்கி சுற்றுலா இடங்களை பார்வையிட அனுமதிக்கப்படும். இந்த புதிய நடைமுறை இன்று முதல் வரும் டிசம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.
இது தொடர்பான புதிய விசா நடைமுறைகளை அந்நாட்டு அரசு தற்போது வெளியிட்டுள்ளது.
* அனைத்து இந்தியப் பயணிகளுக்கு 1 டிசம்பர் 2023 முதல் 31 டிசம்பர் 2024 வரை மலேசியாவிற்கு விசா இல்லாத நுழைவு இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | ஆண்டு இறுதியை கொண்டாட திட்டமா? செலவு குறைவாக விசாவே இல்லாமல் செல்லக்கூடிய நாடுகள்
* விசா இல்லாமல் பயணிக்க குறைந்தது 6 மாத காலம் செல்லக்கூடிய பாஸ்போர்ட், மலேசியா சென்று திரும்புவதற்கான விமான டிக்கெட்டுகள், ஹோட்டல் முன்பதிவு மற்றும் தேவையான நிதி ஆதாரம் இருப்பது அவசியம் என்று அறிவித்துள்ளது.
* இந்த குறிப்பிட்ட காலகட்டத்தில் ஒவ்வொரு முறை மலேசியா செல்லும் போதும் 30 நாட்கள் வரை விசா இல்லாமல் தங்கியிருக்க அனுமதி வழங்கப்படும்.
* தேவையான ஆவணங்களை மலேசியா டிஜிட்டல் வருகை அட்டை (MDAC) https://imigresen-online.imi.gov.my/mdac/main என்ற இணையதளத்தில் பதிவு செய்யவேண்டியது அவசியம்.
* விமானம், கப்பல் மற்றும் தரை வழியாக மலேசியா செல்லும் இந்தியர்கள் அந்நாட்டு குடிவரவு அதிகாரிகள் பாதுகாப்புத் திரையிடல் மற்றும் குடியேற்ற அனுமதி மேற்கொண்டு அதற்கான அனுமதி வழங்குவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலேசியாவில் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்கள்:
குடும்பத்தினருடன் நீங்கள் மலேசியா செல்கிறீர்கள் என்றால் இந்த இடங்களுக்கு கட்டாயம் செல்லுங்கள்.. பனோரமா லங்காவி ஸ்கைகேப், லங்காவி தீவு, மந்தனனி, லெகோலாண்ட் மலேசியா, கினாபாலு மலை, பட்டூ குகைகள், சிபாடன் தீவு, புலா டியோமன், கிணபடங்கன், மெளகா, கோலாலம்பூர் பறவை பூங்கா, அ’ஃபாமோசா கோட்டை ஆகிய இடங்களுக்கு செல்லலாம்.
இந்தியாவும் சீனாவும் மலேசியாவின் நான்காவது மற்றும் ஐந்தாவது மிகப் பெரிய பொருளாதாரச் சந்தையாகும். மலேசிய அரசின் தரவுகளின்படி, இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில் 9.16 மில்லியன் சுற்றுலா பயணிகள் மலேசியாவுக்கு வந்துள்ளனர். இவர்களில், சீனாவில் இருந்து 4,98,540 பேர் மற்றும் 2,83,885 பேர் இந்தியாவில் இருந்தும் சென்றிருக்கிறார்கள். கரோனா தொற்றுக்கு முந்தைய 2019-ஆம் ஆண்டை பொறுத்தவரையில், சீனாவில் இருந்து 1.5 மில்லியன் மற்றும் இந்தியாவில் இருந்து 3,54,486 பேர் மலேசியா பயணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | Free Visa: இந்திய குடிமக்களை விசா இல்லாமல் வரவேற்கும் மலேசியா! சீனாவிற்கும் சலுகை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ