இன்று முதல் மாற உள்ள புதிய மாற்றங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.. இவை உங்களின்  இயல்பு வாழ்கையை முற்றிலும் பாதிக்கும்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒவ்வொரு மாதமும் மத்திய, மாநில அரசுகள் புதிய விதிமுறைகளை அமல்படுத்துவது வழக்கம். இதை தவிர, விலை ஏற்ற இறக்கங்களும் ஒவ்வொரு மாதமும் மாறுகின்றன. இவை பெரும்பாலும் சாதாரண மக்களின் தினசரி வாழ்வு சார்ந்தவை. மார்ச் மாதம் என்னென்ன மாறவிருக்கிறது என்பதை காணலாம்.


​கேஸ் சிலிண்டர் விலை


ஒவ்வொரு மாதமும் சமையல் கேஸ் சிலிண்டர் (LPG Gas Cylinder) விலை மாற்றப்படுவது வழக்கம். ஆனால், பிப்ரவரி மாதத்தில் மட்டும் சிலிண்டர் விலை மூன்று முறை மாற்றப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், மார்ச் மாதமும் சிலிண்டர் விலை ஏற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


பெட்ரோல் டீசல் விலை


சிலிண்டர் விலையை போலவே பெட்ரோல் டீசல் விலையும் (Petrol Diesel Price) இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் பெட்ரோல் டீசல் விலை 90 ரூபாய்க்கு மேல் இருக்கிறது. சில பகுதிகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை தாண்டிவிட்டது. இத்துடன் நிற்காமல் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதே போக்கில் மார்ச் மாதமும் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயரும் என தெரிகிறது.


ALSO READ | 7th Pay Commission: இந்த வகைகளில் ஊழியர்களுக்கு நன்மை செய்தது மத்திய அரசு: விவரம் உள்ளே


வங்கிக் கணக்குடன் ஆதார் இணைப்பு 


அரசு மானியம் மற்றும் அரசு நேரடியாக பணமாக அனுப்பக்கூடிய சலுகைகளை பெற SBI வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்குடன் ஆதார் கார்டை (Aadhar card) கட்டாயமாக இணைக்க வேண்டுமென அறிவித்துள்ளது.


ATM-களில் பணம் எடுக்கும் முறையில் மாற்றம்


இந்தியன் வங்கியின் ATM-களில் இனி வாடிக்கையாளர்களால் 2000 ரூபாய் நோட்டு எடுக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மார்ச் 1 ஆம் தேதி முதல் இந்தியன் வங்கி (Indian Bank) ATM-களில் 2000 ரூபாய் நோட்டு வராது.


இலவச ஃபாஸ்டேக் வழங்கப்படாது


இன்று முதல் சுங்கச் சாவடிகளில் இலவச ஃபாஸ்டேக் (free FASTag) வழங்கப்படாது என இந்திய நெடுஞ்சாலை துறை அறிவித்துள்ளது. புதிதாக ஃபாஸ்டேக் வாங்க விரும்புவோர் 100 ரூபாய் செலுத்தி பெற்றுக்கொள்ளலாம்.


உலக நிகழ்வுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள ZEE இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்... 


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR