புதுடெல்லி: எல்பிஜி சிலிண்டர்கள் புக் செய்வதில், போர்டபிளிட்டி  வசதியை (LPG Refill Booking Portability)அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. அதாவது, இப்போது நீங்கள் எந்த விநியோகஸ்தரிடமிருந்தும் உங்கள் எல்பிஜி சிலிண்டரை வாங்குவது என்பதை நீங்களே முடிவு செய்யலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

உங்கள் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் தற்போதைய LPG விநியோகஸ்தரின் சேவை உங்களுக்கு திருப்தியாக இல்லை என்றால், அதற்கு பதிலாக மற்றொரு விநியோகஸ்தரை நீங்கள் தேர்வு செய்யலாம். இந்த வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டது, இப்போது அது அங்கீகரிக்கப்பட்டுள்ளது.


LPG சிலிண்டர் விநியோகஸ்தரரை மாற்ற முடியும்
பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் எடுத்துள்ள இந்த முடிவில், எல்பிஜி வாடிக்கையாளர்கள் எந்த விநியோகஸ்தரிடம்,  LPG கேஸ் புக் செய்யலாம் என்பதை தீர்மானிக்க அனுமதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் கீழ் தங்கள் முகவரியில் உள்ள விநியோகஸ்தர்களின் பட்டியலிலிருந்து தாங்கள் வாங்க விரும்பும் " விநியோகஸ்தரை" தேர்ந்தெடுக்க முடியும். முன்னோடித் திட்டமான இது முதலில், சண்டிகர், கோயம்புத்தூர், குர்கான், புனே மற்றும் ராஞ்சி ஆகிய இடங்களில் தொடங்கப்படும்.


விநியோகஸ்தர்களின் பட்டியல் போர்ட்டலில் கிடைக்கும்


வாடிக்கையாளர்கள்,  மொபைல் செயலி / வாடிக்கையாளர் போர்ட்டலுக்கு சென்று, எல்பிஜி சிலிண்டரை புக் செய்ய உள்நுழையும்போது, ​​ விநியோகஸ்தர்களின் முழுமையான பட்டியலையும் அவற்றின் மதிப்பீட்டையும்  ஆராய்ந்து, சிறந்த விநியோகஸ்தர்களைத் தேர்வுசெய்ய வாடிக்கையாளருக்கு உதவுகிறது. இதனால், போட்டி அதிகரித்து, விநியோகஸ்தர்கள் தங்கள் சேவையை மேம்படுத்த வழிவகுக்கும். எல்பிஜி சிலிண்டர் விநியோகஸ்தர்களின் இணைய முகவரிகள்


IOC - https://cx.indianoil.in
Bharat Gas - https://my.ebharatgas.com
HPGas - https://myhpgas.in


ALSO READ | சர்வதேச அரங்கில் சிறகு விரிக்கும் “Koo"; நைஜீரியாவில் காலடி வைத்தது

போர்ட்டலில் ஆன்லைன் பரிமாற்ற வசதி
அதே பகுதியில் சேவைகளை வழங்கும் பிற விநியோகஸ்தர்களுக்கு எல்பிஜி இணைப்பை ஆன்லைனில் மாற்றுவதற்கான வசதி,  தற்போதுள்ள தங்கள் எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களின் வலை போர்டல் மற்றும் அவர்களின் மொபைல் செயலி ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்கள் மாற்றிக் கொள்ளும் வசதி, வழங்கப்பட்டுள்ளது. 


வாடிக்கையாளர்கள் தங்கள் பெயர்வுத்திறன் (போர்டபிளிடி) கோரிக்கையை 3 நாட்களுக்குள் திரும்பப் பெறலாம், இல்லையெனில் எல்பிஜி இணைப்பு தானாகவே வாடிக்கையாளர் தேர்ந்தெடுத்த விநியோகஸ்தருக்கு மாற்றப்படும். 


மேலும், டிஜிட்டல் இந்தியா திட்டத்தை முன்னோக்கி எடுத்து செல்லும் வகையில், பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் உள்ள எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற டிஜிட்டல் வசதிகளை வழங்குவதற்காக தொடர்ந்து தங்கள் தளத்தை மேம்படுத்தி வருகின்றன. COVID-19 காரணமாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளின் அடிப்படையில் பாதுகாப்பான பரிவர்த்தனைகள் ஊக்குவிக்கப்பட்டுள்ளன.  IVRS, SMS, WhatsApp, Portal மற்றும் Mobile App தவிர, வாடிக்கையாளர்கள் UMANG செயலியிலிருந்தும் கேஸ் சிலிண்டரை பதிவு செய்யலாம். இது தவிர, பாரத் பில் பே சிஸ்டம் ( Bharat Bill Pay System ) செயலியிலிருந்தும் முன்பதிவு செய்யலாம். இது தவிர, வாடிக்கையாளர்கள் ஈ-காமர்ஸ் வலைத்தளங்களான அமேசான் மற்றும் பேடிஎம் ஆகியவற்றிலிருந்து எரிவாயுவை முன்பதிவு செய்து பணம் செலுத்தலாம்.


ALSO READ | மருத்துவர்கள் சாதனை! கோமா நோயாளியை மீட்ட கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR