LPG Subsidy: இனி LPG மானியம் சிலருக்கு கிடைக்காமல் போகலாம்..!!
பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், எல்பிஜி சிலிண்டர் மானியம் தொடர்ந்து கிடைக்கும் என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர்
LPG Subsidy: பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், எல்பிஜி சிலிண்டர் மானியம் தொடர்ந்து கிடைக்கும் என மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். எல்பிஜி சிலிண்டரின் விலை 1000 ரூபாயைத் தொடும் நிலையில், இது குறித்து தொடர்ந்து விவாதம் உள்ளது. அதிகரித்து வரும் எல்பிஜி சிலிண்டர்களின் விலை குறித்து அரசு தரப்பு எதுவும் தெரிவிக்கவில்லை
ஒவ்வொரு மாதமும் வர்த்தக உபயோகத்திற்கான எரிவாயு சிலிண்டரின் (LPG Cyminder) விலை அதிகரிக்கிறது. இந்நிலையில் ஒரு சிலிண்டருக்கு 1000 ரூபாய் வரை செலுத்த நுகர்வோர் தயாராக இருப்பதாக அரசாங்கத்தின் ஆய்வு ஒன்று கூறுகிறது. எல்பிஜி சிலிண்டர்கள் குறித்து அரசாங்கம் இரண்டு விதத்தில் முடிவெடுக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலாவது மானியம் இல்லாமல் சிலிண்டர்களை அரசு வழங்குவது. இரண்டாவதாக, சில தேர்ந்தெடுக்கப்பட்ட நுகர்வோருக்கு மட்டும் மானிய விலையில் சிலிண்டர் வழங்குவது.
அதிகார பூர்வமாக இது குறித்த தகவல் ஏதும் வெளிவரவில்லை என்றாலும், ரூ.10 லட்சம் வருமானத்திற்கு குறைவானவர்களுக்கு மட்டுமே மானியம் கிடைக்கும் என்ற விதி அமல் படுத்தப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. உஜ்வாலா திட்டத்தின் பயனாளிகளுக்கு மானியத்தின் பலன் கிடைக்கும். மீதமுள்ள மக்களுக்கு மானியம் விலக்கிக் கொள்ளப்படலாம்.
ALSO READ | உங்களுக்கு LPG மானியம் கிடைக்கவில்லையா; காரணம் ‘இதுவாக’ இருக்கலாம்
நேரிடையாக, பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மானியம் செலுத்தும் DBT திட்டம், 2015, ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது. இதன் கீழ் வாடிக்கையாளர்கள் LPG சிலிண்டருக்கான முழுத் தொகையையும் செலுத்த வேண்டும். அதே நேரத்தில், மானியப் பணம் அரசாங்கத்தின் சார்பாக வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் திருப்பி செலுத்தப்படும்.
இந்த மாதம் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு, சென்னையில் சிலிண்டர் ரூ.2,133க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே வேளையில் வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ.915.50 என்ற விலையில் விற்பனையாகிறது.
ALSO READ | Free LPG Scheme: மத்திய அரசின் இலவச சிலிண்டர் திட்டம் பெறுவது எப்படி?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR