சுக்கிர திசை மொத்தம் 20 வருடங்கள் நடைபெறும். சுக்கிரதிசை வந்தாலே செல்வங்கள் கொழிக்கும். சுக்கிரன் ஒருவரின் ஜெனன கால ஜாதகத்தில் பலம் பெற்று அமைந்திருந்தால் மட்டுமே அத்திசைக்கான நற்பலன்களை பெற முடியும். கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களின் நிலையில் இந்த மாற்றங்கள் அனைத்தும் 12 ராசியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். சில ராசிக்கு நன்மை தரும். சில ராசிக்கு தீங்கு விளைவிக்கக்கூடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த முக்கிய கிரகங்களில் (Astrology) ஒன்றான சுக்கிரன், வருகிற 8 டிசம்பர் 2021 அன்று ராசியை மாற்றப் போகிறார். அப்போது சுக்கிரன் தனுசு ராசியிலிருந்து (Rasipalan) மதியம் 12:56 மணிக்குப் புறப்பட்டு மகர ராசிக்குள் நுழைகிறார். டிசம்பர் 30-ஆம் தேதி வரை சுக்கிரன் மகர ராசியில் இருந்து சில ராசிக்காரர்களை செல்வந்தர்களாக ஆக்குவார். அவை எந்த ராசிகள் என்று பார்ப்போம்.


ALSO READ | அடுத்த 13 நாட்களுக்கு அன்னை லட்சுமியின் கடைக்கண் பார்வை பெறும்  5 ராசிக்காரர்கள்!


இந்த ராசிக்காரர்களுக்கு பணம் கொட்டோ கொட்டுன்னு கொட்டும்


மகர ராசியில் சுக்கிரனின் பிரவேசம் 4 ராசிக்காரர்களுக்கு அற்புதமான தருணங்களைத் தரும். இந்த ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் அருளால் பெரும் பணம் கிடைக்கும். இதனுடன், வசதிகளும் அதிகரிக்கும். சுக்கிரன் எந்த ராசிக்கு செல்வத்தை உண்டாக்கப் போகிறார் என்பதை தெரிந்து கொள்வோம்.


மேஷம்: மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் சஞ்சாரம் மிகவும் சாதகமாக இருக்கும். பணியில் பதவி உயர்வு, மரியாதை கிடைக்கும். செல்வத்தால் லாபம் உண்டாகும். வசதிகள் பெருகும். மொத்தத்தில் எல்லா தரப்பிலும் லாபம் இருக்கும்.


ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் மகர ராசியில் பிரவேசிப்பதால் பெரும் பண வரவு உண்டாகும். உத்தியோகத்தில் பொறுப்பு அதிகரிக்கும் மற்றும் எதிர்காலத்தில் பெரிய பலன்களைப் பெறுவீர்கள். உங்கள் பணி பாராட்டப்படும். தொழிலதிபர்களின் கடின உழைப்பும் பலன் தரும், அமோக லாபம் கிடைக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்.


சிம்மம்: சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்தக் காலம் மிகவும் நன்மை பயக்கும். பண வரவு அமோகமாக இருக்கும். நீங்கள் சில நல்ல செய்திகளைப் பெறலாம்.


கன்னி: கன்னி ராசிக்காரர்களுக்கும் சுக்கிரன் கிரகத்தின் பாக்கியம் கிடைக்கும். நீங்கள் ஏதேனும் புதிய வருமான ஆதாரத்தை உயர்த்த முயற்சித்திருந்தால், இப்போது உங்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். இந்த வருமானம் உங்கள் நிதி நிலையை பலப்படுத்தும். விரும்பிய வேலை வாய்ப்பு கிடைக்கும். சுப பயணம் மேற்கொள்வீர்கள். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும்.


(பொறுப்புதுறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது.)


READ ALSO | மூன்றாம் உலகப்போர் 2022ல் வரும்! -நோஸ்ட்ராடாமஸ் கணிப்பு


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR