கிரகங்களின் இருப்பிடத்தில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிகளிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இவற்றால் சில ராசிகளில் சுப பலன்களும், சில ராசிகளில் அசுப பலன்களும் உண்டாகின்றன. மார்ச் மாதம் துவங்கிவிட்டது. ஜோதிட கணிப்புகளின் படி, இந்த மாதம் சில ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சிகரமாகவும் சில ராசிக்கார்ரகளுக்கு பாதகமாகவும் அமையவுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மார்ச் மாதத்தில் அதிர்ஷ்டம் பிரகாசிக்கக்கூடிய 4 ராசிக்காரர்களைப் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம். இந்த ராசிக்காரர்கள் மார்ச் மாதத்தில் பல வெற்றிகளைப் பெறக்கூடும். அன்னை லட்சுமியின் சிறப்பு அருளும் இவர்களுக்கு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யார் இந்த அதிர்ஷ்டக்கார ராசிகள் என்று பார்க்கலாம். 


மிதுனம்: 
ஜோதிட சாஸ்திரத்தின் படி, மார்ச் மாதம் மிதுன ராசிக்காரர்களுக்கு நல்ல மாதமாக இருக்கும். இவர்கள் கடின உழைப்பின் பலனை அடைவார்கள். இதுமட்டுமின்றி, பணியில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது. அதிர்ஷ்டத்தின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக கிடைக்கும். தொழிலதிபர்கள் முன்னேற்றம் அடையலாம். இதுமட்டுமின்றி, மிதுன ராசியில் பிறந்த மாணவர்களுக்கு சாதகமான முடிவுகள் கிடைக்கும். மார்ச் மாதத்தில் பொருளாதார நிலை மேம்படும்.


மேலும் படிக்க | மகர ராசியில் 4 கிரகங்களின் அற்புத சங்கமம்: இந்த ராசிக்காரர்களுக்கு அற்புத யோகம் 


கடகம்: 
கடக ராசிக்காரர்களுக்கு அனைத்து பணிகளிலும் வெற்றி கிடைக்கும். உங்கள் பணி பாராட்டப்படலாம். வியாபாரத்தில் லாபம் கூடும். கடக ராசி மாணவர்கள் படிப்பில் சாதகமான பலன்களைப் பெறுவார்கள். உங்கள் வாழ்க்கையில் அமைதியான சூழல் நிலவும். அன்னை லட்சுமியின் அருளால் பொருளாதார நிலை மேம்படும்.


சிம்மம்: 


தொழிலதிபர்களுக்கு மார்ச் மாதம் சிறப்பாக இருக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர். சிம்ம ராசிக்காரர்களின் அனைத்து விருப்பங்களும் நிறைவேறும். குடும்பத்தில் அமைதி நிலவும். உறுப்பினர்களிடையே அன்பு அதிகரிக்கும். அதுமட்டுமின்றி காதல் விஷயத்திலும் வெற்றி கிடைக்கும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். பல வழிகளில் பணம் வரக்கூடும். இந்த மாதம் முதலீடு செய்வதற்கு ஏற்ற மாதமாக இருக்கும்.


துலாம்: 


துலா ராசிக்காரர்களுக்கு நிதி நிலை சிறப்பாக இருக்கும். இந்த மாதம் துலா ராசிக்காரர்களுக்கு அன்னை லட்சுமியின் அருள் நிலைத்திருக்கும். அனைத்து பணிகளிலும் சிறப்பான பலன்கள் கிடைக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் / மனைவி இடையே அன்பு அதிகமாகும். குழந்தைகளால் நிம்மதி கிடைக்கும். நீண்ட நாள் காத்திருந்த பயணம் நடக்கும். இந்த பயணத்தால் பண ஆதாயம் கிடைக்கக்கூடும். வேறு வேலை மாற்ற நினைத்திருப்பவர்கள் இப்போது அதை செய்யலாம். வேலை மாறுவதற்கு இது நல்ல நேரமாக இருக்கும்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.) 


மேலும் படிக்க | இந்த 3 ராசிக்காரர்களுக்கு சனியின் ராசி மாற்றத்தால் சிறப்ப்பாக இருக்கும் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR