சுக்ரனின் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஓஹோன்னு இருக்கும்

பொருள் ரீதியான இன்பம், செழுமை, புகழ், கலை, திறமை, அழகு, காதல், நிம்மதி உள்ளிட்ட பல இன்பங்களை இவர்கள் பெறப் போகிறார்கள்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 1, 2022, 07:00 PM IST
  • நிதி நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள்.
  • குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்.
  • ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள்.
சுக்ரனின் ராசி மாற்றத்தால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஓஹோன்னு இருக்கும்  title=

சுக்ரனின் ராசி மாற்றம்: ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரன் மக்களின் நல்வாழ்வுக்கான கிரகமாக கருதப்படுகிறார்.  சுக்கிரன் கிரகம் தனது ராசியை மாற்றி வேறு ராசிக்குள் நுழையும் போதெல்லாம் லட்சுமி தேவியின் சிறப்பு அருள் பல ராசிகளின் மீது பொழிந்து அவர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும் என்பது நம்பிக்கை.

சுக்கிரன் பிப்ரவரி 27 ஆம் தேதியன்று மகர ராசியில் நுழைந்துள்ளார். மார்ச் 31 வரை அவர் இந்த ராசியில் இருப்பார். அவருடைய இந்த ராசி மாற்றம் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது. குறிப்பாக பல ராசிக்காரர்களுக்கு இந்த நேரத்தில் அதிர்ஷ்ட அலை அடிக்கும். 

பொருள் ரீதியான இன்பம், செழுமை, புகழ், கலை, திறமை, அழகு, காதல், நிம்மதி உள்ளிட்ட பல இன்பங்களை இவர்கள் பெறப் போகிறார்கள். சுக்ரனின் ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை ஜொலிக்கப்போகிறது என இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மேலும் படிக்க | புகுந்த வீட்டில் மகிழ்ச்சியை கொண்டு சேர்க்கும் ‘4’ ராசிப்பெண்கள்..!!! 

நிதி நெருக்கடியில் இருந்து விடுபடுவீர்கள்

கடகம்: சுக்கிரன் கிரகத்தால் சிறப்பு ஆசிகள் கிடைக்கும். பணச்சிக்கலில் இருந்து விடுபடுவீர்கள். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும். கடக ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். பணிகளில் வெற்றி பெற கடினமாக உழைக்க வேண்டியதில்லை.

குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும்

ரிஷபம்: ஆரோக்கிய நன்மைகள் உண்டாகும். கௌரவம், பதவி உயர்வு கிடைக்கும். பணியிடத்தில் உங்கள் பணி பாராட்டப்படும். பண வரவும் லாபமும் கிடைக்கும். இதன் காரணமாக உங்கள் நிதி நிலை வலுவாக இருக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும்.

ஆன்மீகப் பணிகளில் ஈடுபடுவீர்கள்

மேஷம்: குடும்ப உறுப்பினர்களுடன் நேரத்தை செலவிடுவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்திற்கு இது மிகவும் உன்னதமான நேரமாக இருக்கும். செய்யும் பணிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். மேஷ ராசிக்காரர்கள் நிதி பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். சமய மற்றும் ஆன்மீக பணிகளில் ஈடுபடுவீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றுக்கு பொறுப்பேற்காது.)  

மேலும் படிக்க | 22 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த ராசியில் சனி பெயர்ச்சி, மிகுந்த கவனம் தேவை 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News