புதுடெல்லி: காரில் சாதி அடையாளத்தை வெளிப்படுத்திய லக்னோ இளைஞர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இது போல் ஒரு நோட்டீஸ் அனுப்புவது முதல்முறை என்பது குறிபிடத்தக்கது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாதி (Caste) அடையாளங்களைக் காட்டும் வாகனங்களை பறிமுதல் செய்யுமாறு அனைத்து ஆர்டிஓக்களுக்கும் உத்தரப்பிரதேச (Uttar Pradesh) மாநில கூடுதல் போக்குவரத்து ஆணையர் (Additional Transport Commissioner) உத்தரவு பிறப்பித்த அடுத்த நாளே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


லக்னோவில் “சக்சேனா ஜி” (“Saxena Ji”) என்று எழுதப்பட்ட காரில் சென்றுக் கொண்டிருந்த இளைஞருக்கு சலான் வழங்கப்பட்டது. உத்தரபிரதேச கூடுதல் போக்குவரத்து ஆணையர் (Additional Transport Commissioner) மாநிலங்களின் அனைத்து பிராந்திய போக்குவரத்து அலுவலகங்களுக்கும் (RTOs) உத்தரவு பிறப்பித்த அடுத்த நாள் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Also Read | Dubaiஇல் PUBG மொபைல் குளோபல் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி 


சாதி அடையாளங்களைக் காட்டும் அனைத்து வாகனங்களையும் (Vehicles) பறிமுதல் செய்யுங்கள் என்று டிசம்பர் 24 தேதியிட்ட உத்தரவின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதோடு சாதி அடையாளங்களைக் காட்டும் வாகனங்களை கைப்பற்றவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR