ஒரு குழந்தை பிறந்த உடனே, பிறந்த நேரத்தை பொறுத்து அவர்களுக்கான ராசி, நட்சத்திரம் என்ன? என்று பார்ப்பது இந்திய குடும்பத்தில் இயல்பான விசயமாகும். சில நட்சத்திரங்கள் அதிர்ஷ்டம் கொடுப்பவையாகவும், பிரபலமானவர்களின் நட்சத்திரம் என்று சொல்லப்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஜோதிடத்தின் அடிப்படையில் மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருக்கின்றன. அவரவர் நட்சத்திரங்களை பொறுத்தே குணநலன்கள் அமைகிறது என்பது நம்பிக்கை. 


27 நட்சத்திரங்களில் ஒன்றான மகம் நட்சத்திரத்தில் பெண்கள் பிறந்தால் அது மிகவும் அதிர்ஷ்டமானதாக பார்க்கப்படுகிறது. அவர்கள் எதை செய்தாலும் தனித்துவம் மிக்கதாக இருக்கிறது. 


மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களின் குணநலன்கள் என்ன தெரியுமா?


மேலும் படிக்க | இந்த ராசிகளுக்கு லட்சுமி தேவியின் அருளால் பண மழை பொழியும்


எப்பொழுதும் தெளிவான சிந்தனை உடைய மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அதிகப்படியான ஆற்றல் நிறைந்திருக்கும். சிம்ம ராசிக்கு உரிய நட்சத்திரமான மகம், என்பதால் செய்யும் காரியத்தை  தனித்துவமாக செய்ய வேண்டும் என்று இந்த ராசிப் பெண்கள் நினைப்பார்கள்.


பேச்சிலும் வாதம் செய்வதிலும் சிறப்பு வாய்ந்தவர்களாக இருக்கும் மகத்தில் பிறந்த மங்கையிடம் பேசும் பொழுது மிகுந்த கவனத்துடன் பேசவேண்டும். நுண்கலைகளில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்களாக திகழும் மக நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் ஜெகத்தை ஆள்வார்கள் என்று பழமொழியே உண்டு.  


தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் அமரர் செல்வி. ஜெயலலிதா, மகம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.



மகம் நட்சத்திரத்தில் பிறந்த பெண்களுக்கு கல்வியும் இருந்தால் அது கலைமகளும் மலைமகளும் சேர்ந்து அருள் புரியும் ஜாதகமாக இருக்கும். வாழ்க்கையின் பிற்பகுதிக்கு மேல் சந்திரதிசை ஆரம்பிக்கும். 


அப்பொழுது வாழ்க்கையில் சில இக்கட்டான பிரச்சனைகள் வர ஆரம்பிக்கும். அதுபோன்ற தருணங்களில் மனம் தளராமல் மிகுந்த தைரியத்துடன் செயல்பட வேண்டும்.


மேலும் படிக்க | இந்த 5 ராசிக்காரர்களின் தொழிலில் இருந்த தடைகள் நீங்கும்


குடும்பத்தின் மீது மிகுந்த அக்கறையும், பாசமும் கொண்ட மக நட்சத்திரத்தினருக்கு இளம் வயதிலேயே சுக்கிர தசை ஆரம்பித்து விடுவதால் இவர்களிடம் பணம், பொருள், செல்வம் அனைத்தும் அதிகப்படியாக இருக்கும். ஆனால் மனக்குழப்பத்தால் அதிகமாக பாதிக்கப்படும் பெண்களும் இவர்களே. 


பிறரின் கீழ் வேலை செய்வதை விட சொந்தமாக தொழில் செய்வதில் விருப்பம் கொண்ட மக நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள், எந்த வேலையை எடுத்தாலும் அதனை வெற்றிகரமாக முடித்து காட்டுவார்கள். 


பரணி, ரோகிணி, திருவாதிரை, பூசம், பூரம், பூராடம், அஸ்தம், அனுஷம், திருவோணம், சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்களுடன் இணக்கமாக இருக்கும் மகத்து மங்கைகளுக்கு மிருகசீரிஷம், புனர்பூசம், சித்திரை, திருதியை, உத்திரம், விசாகம், உத்திராடம், அவிட்டம், பூரட்டாதி ஆகிய நட்சத்திரத்தில் பிறந்தவர்களுடன் சற்று பொருந்தாமல் போகலாம்.


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )


மேலும் படிக்க | மீனத்தில் குருபகவான்: இந்த 3 ராசிகளின் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும் 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR