மீனத்தில் குருபகவான்: இந்த 3 ராசிகளின் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும்

Astrology: ஜோதிடத்தில், வியாழன் கிரகம், அதாவது குரு பகவான் மிகவும் முக்கியமானவராக கருதப்படுகிறார். மீனத்தில் தேவகுரு வியாழன் இருப்பதால் எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : May 26, 2022, 01:26 PM IST
  • வியாழனின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும்.
  • கடக ராசிக்காரர்களுக்கு, வியாழன் கிரகம் முன்னேற்றத்திற்கான புதிய வழிகளைத் திறக்கும்.
  • வியாழன் கிரகம் மீன ராசியில் இருப்பதால், மீன ராசிக்காரர்கள் தேவகுரு வியாழனின் சிறப்பு ஆசிகளைப் பெறுவீர்கள்.
மீனத்தில் குருபகவான்: இந்த 3 ராசிகளின் வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும் title=

மீன ராசியில் தேவ குரு பிருஹஸ்பதி: ஜோதிடத்தில், வியாழன் கிரகம், அதாவது குரு பகவான் மிகவும் முக்கியமானவராக கருதப்படுகிறார். புராணங்களின்படி, குரு பிரகஸ்பதி தேவர்களின் குருவாக நம்பப்படுகிறார். அதனால்தான் அவர் தேவகுரு பிருஹஸ்பதி என்று அழைக்கப்படுகிறார். 

ஜோதிடர்களின் கூற்றுப்படி, வியாழன் குரு சுப பலன்களை மட்டுமே தருகிறது. இருப்பினும், சில அரிய சூழ்நிலைகளில் மட்டுமே, வியாழன் அசுப பலன்களைத் தருகிறது. ஜோதிட சாஸ்திரத்தின்படி, வியாழன் கிரகம் தற்போது அதன் ராசியான மீனத்தில் உள்ளது. இதனுடன், இந்த ராசியில் ஏற்கனவே சுக்கிரன் கிரகமும் உள்ளது. வியாழன் தேவர்களின் குருவாக கருதப்படுகிறார், சுக்கிரன் அசுரர்களின் குருவாக கருதப்படுகிறார். மீனத்தில் தேவகுரு வியாழன் இருப்பதால் எந்த ராசிக்காரர்களுக்கு பலன் கிடைக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம். 

மிதுனம்:
வியாழனின் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களைக் கொண்டுவரும். இந்த மாற்றம் உங்களுக்கு மங்களகரமானதாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலை மேம்படும். வருமான ஆதாரங்கள் அதிகரிக்கும். மிதுன ராசிக்கார்ரகள் பண ஆதாயத்தை எதிர்பார்க்கலாம். இந்த காலத்தில் நீண்ட நாட்களாக தடைபட்டிருந்த பணிகள் நடந்து முடியும். இந்த காலகட்டம் மாணவர்களுக்கு சாதகமாக இருக்கும்.

மேலும் படிக்க | ஜூன் மாதத்தில் 5 கிரகங்களின் ராசி மாற்றம்: அனைத்து ராசிகளிலும் இருக்கும் தாக்கம் 

கடகம்:
கடக ராசிக்காரர்களுக்கு, வியாழன் கிரகம் முன்னேற்றத்திற்கான புதிய வழிகளைத் திறக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். எழுத்து போன்றவற்றுடன் தொடர்புடைய மக்களின் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்கள் ஏற்படும். இந்த நேரம் வியாபாரம் செய்பவர்களுக்கு சாதகமாக இருக்கும். செல்வம் பெருகலாம்.

உறவினர்கள், நண்பர்களிடமிருந்து நல்ல செய்திகள் வந்தடையும். உங்களுக்கு உகந்த பல நல்ல திருப்பங்கள் இந்த நேரத்தில் ஏற்பட வாய்ப்புள்ளது.

மீனம்:
வியாழன் கிரகம் மீன ராசியில் இருப்பதால், மீன ராசிக்காரர்கள் தேவகுரு வியாழனின் சிறப்பு ஆசிகளைப் பெறுவீர்கள். தனுசு மற்றும் மீன ராசிக்காரர்களின் ஆளும் கிரகமாக வியாழன் கருதப்படுகிறது. வியாழன் கடகத்தில் உச்சம் பெற்று மகர ராசியில் வலுவிழந்தவர். மீன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் வருமானம் அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. 

மீன ராசிக்காரர்களின் நிதி நிலையும் இந்த காலத்தில் மாறும். புதிய தொழில் தொடங்குவதற்கு சாதகமான காலமாக இது உள்ளது. இது முதலீடு செய்வதற்கு ஏற்ற காலமாகும்.

 பணியிடம், தொழில், ஆரோக்கியம் என அனைத்திலும் மீன ராசிக்காரர்களுக்கு ஆதாயங்களே காத்திருக்கிறது.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | இந்த ராசிக்காரர்கள் இன்று புதிய சவாலை சந்திக்க நேரிடும் 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News