Skin care, Lifestyle Tips : நீங்கள் ஆரோக்கியமாக இருப்பதை உங்கள் தோல் மூலம் தெரிந்து கொள்ளலாம். வெளிப்புற தோலில் தெரியும் பளபளப்பு உங்களின் ஆரோக்கியத்தை தெரிவித்துவிடும். அப்படியான தோலை விரும்புவர்கள் உணவு முறையை மாற்ற வேண்டும். ஊட்டச்சத்துகள் மிக்க உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக தோலை பளபளப்பாக்குவதற்கு என்றே ஹெர்பல் டிடாக்ஸ் வாட்டர் இருக்கிறது. இது உங்களின் சருமத்தை பொலிவாக்கும். உடலை புத்துணர்ச்சியாக்குவதுடன், செரிமான ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். இத்தகைய பானத்தை ஹெர்பல் மருத்துவர் சிமோன் பரிந்துரைக்கிறார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிமோன் பரிந்துரைக்கும் ஹெர்பல் டிடாக்ஸ் வாட்டர் எது?, அதில் அப்படி என்ன பலன்கள் இருக்கின்றன?, அதனை எப்படி தயாரிப்பது? என்பது உள்ளிட்ட அடிப்படையான தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள். 


சருமத்தை பொலிவாக்கும் மூலிகை பானம் தயாரிக்கும் முறை


இந்த மூலிகை நீர் தயாரிக்க, பீட்ரூட், ஆப்பிள், திராட்சை மற்றும் பெருஞ்சீரகம் விதைகள் தேவைப்படும். இஞ்சி, பீட்ரூட் மற்றும் ஆப்பிள் ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும். இந்த அனைத்து பொருட்களையும் ஒரு பாட்டிலில் போட்டு தண்ணீர் சேர்த்து கலக்கவும். அவ்வளவு தான் உங்களின் டிடாக்ஸ் மூலிகை தண்ணீர் ரெடி. இதனை குடிப்பதால் ஆரோக்கியம் மற்றும் அழகு ஆகிய இரண்டிற்கும் நன்மைகள் கிடைக்கும்.


மேலும் படிக்க | சமீபத்தில் திருமணமானவரா நீங்கள்? உங்கள் துணையை புரிந்து கொள்வது எப்படி?


சரும பளபளப்பை கொடுக்கும் மற்ற பானங்கள்


* சருமத்தை மேம்படுத்த, இன்னும் சில மூலிகை பானங்கள் உள்ளன. அதில் ஒன்று தான் தேங்காய் தண்ணீர். தேங்காய் தண்ணீர் குடிப்பதால் உடலில் உள்ள நச்சுத்தன்மை நீங்கி சருமம் மேம்படும். தேங்காய் நீரில் எலக்ட்ரோலைட்டுகள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. மேலும் அதில் நல்ல அளவு பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது உடலுக்கு அழற்சி எதிர்ப்பு பண்புகளை அளிக்கிறது. இதை குடிப்பதால் தோல் எரிச்சல் குறைகிறது.


* வெள்ளரிக்காய் மற்றும் புதினா நீரும் ஒரு நல்ல டிடாக்ஸ் மூலிகை பானம். வெள்ளரிக்காயை சிறுசிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீருக்குள் போட்டுவிட வேண்டும். அதனுடன் புதினா நீரையும் சேர்த்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைப்பதுடன் தோலும் பளபளப்பாக இருக்கும். 


* சருமத்தை அழகாக வைத்துக் கொள்ள கேரட் சாறும் அருந்தலாம். கேரட்டில் வைட்டமின் சி மற்றும் ஈ பண்புகள் உள்ளன, இது சருமத்திற்கு புத்துணர்ச்சியையும் பொலிவையும் தரக்கூடியது. இதன் காரணமாக, சருமத்தை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களும் குறையத் தொடங்குகின்றன.


மேலும் படிக்க | காதலி பிறரிடம் பேசுவதால் பொறாமையாக இருக்கிறதா? ஆசுவாசப்படுத்திக் கொள்ள டிப்ஸ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ