ஏப்ரல் 1, இன்று புதிய நிதியாண்டு தொடங்கிவிட்டது. இன்று முதல் பல மாற்றங்கள் நடைமுறைக்கு வரும். எரிவாயு சிலிண்டர்கள் விலை மாற்றம், பரிந்துரைக்கப்படும் மருந்துகளுக்கான விலை உயர்வு, கட்டண மாறுபாடுகள் மற்றும் தங்க நகைகள் விற்பனைக்கான புதிய விதிமுறைகள் ஆகியவை இவற்றில் முக்கிய மாற்றங்களாகும். இந்த மாற்றங்கள் குறித்து அனைவரும் தெரிந்துவைத்திருப்பது மிக அவசியமாகும். ஏனெனில், இவற்றின் தாக்கம் சாமானியர்களின் வாழ்வில் இருக்கும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஏப்ரல் 1, 2023 முதல் அமலுக்கு வரும் மாற்றங்களின் பட்டியல் இதோ:


- இன்று வணிக பயன்பாடு எல்பிஜி சிலிண்டரின் விலை குறைக்கப்பட்டுள்ளது. எனினும், வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் எந்த மாற்றமும் இல்லை.


- ஏப்ரல் 1 முதல், ஆறு இலக்க எண்ணெழுத்து HUID எண்ணைக் கொண்ட தங்க நகைகள் மற்றும் கலைப்பொருட்களை மட்டுமே விற்கமுடியும்.


- சம்பளம் வாங்கும் அரசு சாரா ஊழியர்களுக்கு, விடுப்பு பணப் பட்டுவாடா (லீவ் என்காஷ்மெண்ட்) மீதான வரி விலக்கு கணிசமாக அதிகரிக்கும். 2023 பட்ஜெட்டில் செய்யப்பட்ட அறிவிப்புகளின் கீழ், வரம்பு 3 லட்சத்தில் இருந்து 25 லட்சமாக அதிகரிக்கும்.


- 2023 பிப்ரவரி 1 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி தொடர்பான மாற்றங்கள் ஏப்ரல் 1, இன்று முதல் அமல்படுத்தப்படும். முன்பு, பழைய மற்றும் புதிய வரி விதிகளின் கீழ் வருமான வரி வரம்பு ரூ.5 லட்சமாக இருந்தது. இப்போது புதிய வரி விதிப்பில் வருமான வரி வரம்பு ரூ.7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது ரூ.7 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ள ஊழியர்கள் எந்த வரியும் செலுத்த வேண்டியதில்லை.


- 2,000க்கு மேல் உள்ள அனைத்து யுபிஐ பரிவர்த்தனைகளும் இப்போது வணிகரிடமிருந்து 1.1% இயங்கக்கூடிய கட்டணமாக விதிக்கப்படும். யுபிஐ பேமெண்ட்டுகளுக்கு கூடுதல் கட்டணம் எதுவும் விதிக்கப்படாது.


- ஆக்ஸிஜன் மருந்துகள், வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள் போன்ற மருந்துகளின் விலைகளில் மாற்றம்.


- அனைத்து புதிய வாகனங்களும் BS6 இரண்டாம் கட்ட மாசு உமிழ்வு விதிமுறைகளின் அமல்பாட்டின் படி மிகவும் கடுமையான உமிழ்வு தரநிலைகளை கடைபிடிக்க வேண்டும். இதனால் வாகனங்களின் விலைகள் உயரக்கூடும் என வாகன உற்பத்தியாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.


- கேரளா, மகாராஷ்டிரா போன்ற பல மாநிலங்களில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஸ்டாம்ப் டியூட்டி அதிகரிக்கும்.


மேலும் படிக்க | ஏப்ரல் முதல் நாளே சூப்பர் செய்தி: அதிரடியாக குறைந்தது கேஸ் சிலிண்டர் விலை


- ஈக்விட்டி பங்குகளில் 35% க்கும் குறைவாக முதலீடு செய்யும் டெட் மியூச்சுவல் ஃபண்டுகள் இனி குறியீட்டு பலன்களுக்கு தகுதி பெறாது. அதற்கு பதிலாக தனிநபரின் வரி அடுக்கு விகிதத்தில் வரி விதிக்கப்படும்.


- புதிய வருமான வரி விதியானது சம்பளம் பெறும் நபர்களுக்கு இயல்புநிலை வரி விதிப்பாக மாறும்.


- மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டத்துக்கு இப்போது அதிகபட்சமாக 30 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை வரம்பு கிடைக்கும்.


- மாதாந்திர வருமானத் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு, ஒற்றைக் கணக்குகளுக்கு அதிகபட்சமாக 9 லட்சத்திலிருந்து 15 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.


- யூனிட்-இணைக்கப்பட்ட காப்பீட்டுத் திட்டங்களைத் தவிர்த்து, 5 லட்சத்திற்கும் அதிகமான வருடாந்திர பிரீமியங்களைக் கொண்ட அனைத்து ஆயுள் காப்பீட்டுக் கொள்கைகளும் இப்போது வரிவிதிப்புக்கு உட்பட்டவை.


- பாரத ஸ்டேட் வங்கி (SBI) மற்றும் HDFC வங்கி ஆகியவை இனி சிறப்பு வீட்டுக் கடன் விகிதங்களை அளிக்காது. இது கடன் வாங்குபவர்களுக்கு வட்டி விகிதங்களை அதிகரிக்கும்.


மேலும் படிக்க | மோடி அரசு வெளியிட்ட ஜாக்பாட் அறிவிப்பு: சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் உயர்ந்தன


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ