திருமணமான 6 மாதத்திலேயே குழந்தை பெற்ற மலேசிய மன்னரின் மனைவி!
மலேசிய மன்னரின் மனைவி திருமணமாகி 6 மாதத்திலேயே குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!
மலேசிய மன்னரின் மனைவி திருமணமாகி 6 மாதத்திலேயே குழந்தை பெற்றெடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது!!
மலேசியாவின் 15 ஆவது அரசர் 5 ஆம் சுல்தான் முகம்மது. இவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 7 ஆம் தேதி ரஷ்யாவை சேர்ந்த முன்னாள் மாடல் அழகி ஒக்சனா வியோடினாவை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் மிக ரகசியமாக நடந்தது.
இந்நிலையில் இவர் வெளிஉலகிற்கு தெரியும் வகையில் கடந்தாண்டு நவம்பர் மாதம் தான் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் இந்த தம்பதிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்னாள் குழந்தையும் பிறந்தது.
இந்நிலையில் ஒக்சனா கர்ப்பமாக இருந்த போது ஒரு ஆண் நண்பருடன் நெருக்கமாகவும், முத்தம் கொடுக்கும்படியுமான புகைப்படங்கள் மற்றும் வீடியோ ரஷ்ய ஊடகங்களில் வெளியாகி வைரலாக பரவியது. இதையடுத்து மலேசிய மன்னர் ஓக்சனாவை முத்தலாக் சொல்லி விவாகரத்து செய்துவிட்டார். மேலும் தான் மன்னர் குடும்பத்தின் விதிமுறைகளை மீறிவிட்டதாக கூறி அவரது பதவியையும் ராஜினாமா செய்துவிட்டார்.
தற்போது அதிகாரப்பூர்வமாக கடந்த நவம்பர் மாதம் தான் இருவருக்கும் திருமணமான நிலையில் 6 மாதத்திலேயே முன்னாள் மன்னரின் மனைவி குழந்தை பெற்றுக்கொண்டது பெரும் பரபரப்பாக பேசப்படுகிறது.