தனது குழந்தையின் வீடுப்படத்தை கவனிக்க தனது வீட்டில் உள்ள செல்லப்பிராணிக்கு பயிற்சியளித்துள்ள சம்பவம் அனைவரையும் ஈர்த்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நம்மில் சிலருக்கு செல்ல பிராணிகள் மீது அதீத அக்கறையும் பாசமும் உண்டு. நான் அவற்றை வளர்க்கும் போது அழகாகவும், புத்திசாலியாகவும் மாற்றுவதற்காக சில பயிற்சிகளை அவற்றிற்கு நாம் கற்றுக்கொடுப்பது உண்டு. அது விளையாட்டாக இருக்கட்டும் உணவு உண்ணும் முறையாக இருக்கட்டு நாம் சொல்வதை அப்படியே கடைபிக்க நாம் கற்றுக்கொடுப்பது வழக்கம். இந்நிலையில், ஒருவர் தனது செல்லபிராணியான நாயை தனது மகள் வீட்டுப்பாடம் செய்வதை கண்காணிக்க பயிற்ச்சி செய்துள்ள நிகழ்வு  அனைவரையும் கவர்ந்துள்ளது. 


நாம் பார்த்த வரை குழந்தைகளா பள்ளிக்கு சென்று திரும்பும் போது நமது வீட்டில் உள்ள செல்லபிராணி அவர்கள் மீது துள்ளிகுதித்து அவர்களுடன் விளையாடுவதை மட்டும் தான் நாம் பார்த்திருப்போம். ஆனால் இந்த செல்லபிராணி குழந்தை பள்ளியை விட்டு வீடு திரும்பிய குழந்தை வீட்டுப்பாடம் செய்வதை கண்காணிப்பது பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. 


ஒரு புத்திசாலி அப்பா தனது மகள் தொலைபேசி சோதனைக்கு பதிலாக அவரது வீட்டுபாடத்தில் கவனம் செலுத்துவதை உறுதி செய்ய ஒரு புதிய வழியை கண்டுபிடித்தார். சீனாவில் இருக்கும் ஒரு தந்தை தனது வீட்டுப்பநிகளை செய்துகொண்டிருக்கும் போது, தனது குழந்தையின் வீட்டுபாடத்தை கவனிக்க தனது நாய்க்கு பயிற்சியளித்துள்ளார். அந்த வீடியோ இணையதளத்தில் விரலாக பரவியுள்ளது. அந்த வீடியோவில் ஒரு குழந்தை தனது வீட்டுப்பாடங்களை செய்யும் போது அந்த நாய் உன்னால் உள்ள மேசையில் தனது கைகளை வைத்தபடி கவனிக்கும் அந்த காட்சி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 


ஒரு பெற்றோருக்கு, குழந்தைகளின் வீட்டுப் பணிகளை நேரத்திற்குள் முடிக்க வைப்பது பெரும் தொந்தரவாக இருக்கும். பெரும்பாலான குழந்தைகள் தங்கள் வீட்டுப் பணிகளை வெறுக்கிறார்கள், அவர்கள் அதை முற்றிலும் மறந்துவிடுகிறார்கள். தற்போது தலைவிரித்துள்ள தொழில்நுட்பபத்தால் ஸ்மார்ட் போன்களிலேயே குழந்தைகள் தங்களின் பொழுதை கழிக்கின்றனர். இந்த அப்பாவும் அவரது மகள் ஒரு ஸ்மார்ட்போனில் ஒட்டிக்கொண்டிருப்பதைக் கண்டார், அவளது வீட்டுப்பாடத்தை முடிகாமல் விளையாடுவதைக் கண்டார். இதன் காரணமாகவே அவர் தனது செல்லபிரானியை பயிற்ருவித்ததாக அவர் தெரிவித்துள்ளார். 



அது ஆச்சரியமல்லவா? அந்த செல்லப்பிராணி அங்கு நின்று ஒரு கண்டிப்பான தாயை போல் குழந்தையை பார்க்க வேண்டும். பெண் தனது முன் இருக்கும் போது கவனத்தை திசைதிருப்பிக் கொள்வதற்கு வாய்ப்பே இல்லை. இந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.