சாப்பிடுவது எல்லாம் பீராகக மாறும் வினோத வயிறு கொண்ட ஆண்..!
நியூயார்க் நகரை சேர்ந்த 46 வயதான நபர் ஒருவருக்கு தான் சாப்பிடும் அத்தனையும் `பீர்` ஆக மாறும் வினோத பிரச்சனை இருந்து வருகிறது!
நியூயார்க் நகரை சேர்ந்த 46 வயதான நபர் ஒருவருக்கு தான் சாப்பிடும் அத்தனையும் "பீர்" ஆக மாறும் வினோத பிரச்சனை இருந்து வருகிறது!
இந்த உலகை சுற்றிலும் எத்தனையோ சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து கொண்டுதான் உள்ளது. அவற்றில் சில மக்களின் கவனத்தை ஈர்த்து வைரளாகி வருகிறது. இந்நிலையில், நியூயார்க் நகரை சேர்ந்த 46 வயதான நபர் ஒருவருக்கு தான் சாப்பிடும் அத்தனையும் "பீர்" ஆக மாறும் வினோத பிரச்சனை இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2014 ஆம் ஆண்டு அந்த வாலிபர் இருசக்கர வாகனத்தில் வந்த போது போலீசார் மது அறிந்திருக்கிறார்களா என சோதனையிட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவர் அளவை விட 5 மடங்கு அதிகமாக மது அருந்தி இருந்தது தெரியவந்தது. ஆனால், தனக்கு மது அருந்தும் பழக்கமே இல்லை என அந்த நபர் கூறியது போலீசாரால் நம்ப முடியவில்லை. அவருக்கு இந்த பிரச்சனை தொடர்ந்துகொண்டே போக கடந்த 2017 ஆம் ஆண்டு நியூயார்க்கில் உள்ள ரிச்மண்ட் பல்கலைக்கழகம் சோதனை செய்து பார்த்ததில் அவருக்கு வினோதமான நோய் இருப்பது தெரிய வந்தது.
பின்னர் அந்த ப்ரோசோதனையின் முடிவில், மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்கள், பீர் தயாரிக்க பயன்படுத்தும் கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளை ஆல்கஹாலாக மாற்ற, ஒருவகை பூஞ்சாணை (fungus) பயன்படுத்துவது வழக்கம். அந்த பூஞ்சை இந்த நபரின் வயிற்றில் இருப்பதை அறிந்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அவர் எந்த உணவை உட்கொண்டாலும் அது "பீர்" ஆக மாறிவிடுகிறது. அவரது வயிற்றில் பூஞ்சை போவதற்கான கரணம் என்ன என்று ஆராய்ந்ததில், கடந்த 2011 ஆம் ஆண்டு, கை எலும்பு முறிவின்போது அவர் எடுத்துக் கொண்ட நோய் எதிர்ப்பு மருந்து, மாத்திரைகளின் எதிர்விளைவாக, அவரது வயிற்றில் பூஞ்சைகள் உருவாகியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பின்னர் பிச்மண்ட் பல்கலைக்கழகத்தின் பிரத்யேக மருத்துவர்கள் அளித்த தொடர் சிகிச்சைக்கு பின்னர் அந்த நபர் தற்போது வினோத நோயிலிருந்து விடுபட்டுள்ளார்.