New Delhi: இரண்டு வருட சோதனைக்குப் பிறகு, கடந்த வியாழக்கிழமை (நவம்பர் 5) யுபிஐ (Unified Payments Interface) அடிப்படையிலான வாட்ஸ்அப் பேமெண்ட் (WhatsApp Payment)  சேவையை தொடங்கிக்கொள்ள இந்தியத் தேசிய கொடுப்பனவு நிறுவனம் (NPCI) ஒப்புதல் அளித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

"இந்தியா முழுவதும் பணம் செலுத்துவதற்கு வாட்ஸ்அப் ஒப்புதல் அளிக்கப்பட்டதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்" என்று பேஸ்புக் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க் (Mark Zuckerberg) ஒரு வீடியோவில் தெரிவித்துள்ளார்.


பேஸ்புக்கிற்கு சொந்தமான தனியார் செய்தி சேவையான வாட்ஸ்அப் செயலி யை இந்தியாவில் சுமார் 400 மில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர்.


ALSO READ |  UPI அடிப்படையிலான வாட்ஸ்அப் பணபரிவர்தனைக்கு NPCI அனுமதி..!


தரவு உள்ளூராக்கல் தேவைகளை வாட்ஸ்அப் பூர்த்தி செய்ததாக கடந்த ஆகஸ்ட் மாதம் என்.பி.சி.ஐ தரப்பில் இருந்து இந்திய ரிசர்வ் வங்கிக்கு (Reserve Bank of India) தெரிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந்தியாவில், வாட்ஸ்அப் கட்டண சேவை கூகுள் பே (Google Pay) மற்றும் ஃபோன்பே (PhonePe), அமேசான் பே (Amazon Pay) போன்ற பிற முக்கிய செயலிகளுக்கு போட்டியாக இருக்கும்.


தற்போது இந்த அம்சம் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இனி இந்தியா முழுவதும் வாட்ஸ்அப் மூலம் பணம் அனுப்ப முடியும்.


"இது மிகவும் பாதுகாப்பானது. ஒரு செய்தியை அனுப்புவது போலவே பணத்தை மற்றவர்களுக்கு அனுப்புவதை எளிதாக்குகிறது" என்று வாட்ஸ்அப் ஒரு வலைப்பதிவில் தெரிவித்திருந்தது.


ALSO READ |  EPF கணக்கின் அனைத்து தகவல்களும் Whatsapp மூலம் தெரிந்திக்கொள்ளலாம்; ஹெல்ப்லைன் எண் என்ன?


நேரில் பணம் பரிமாறிக் கொள்ளாமலோ அல்லது உள்ளூர் வங்கிக்குச் செல்லாமலோ மக்கள் பாதுகாப்பாக ஒரு குடும்ப உறுப்பினருக்கு பணத்தை அனுப்பலாம் அல்லது வீட்டுக்கு தேவையான பொருட்காலை தூரத்திலிருந்தும் தங்கள் குடும்பத்துக்கு அனுப்பி வைக்கலாம்.