EPF கணக்கின் அனைத்து தகவல்களும் Whatsapp மூலம் தெரிந்திக்கொள்ளலாம்; ஹெல்ப்லைன் எண் என்ன?

உங்கள் EPFO கணக்கைப் பற்றிய விவரங்களை நீங்கள் தெரிந்துக்கொள்ள விரும்பினால், இப்போது நீங்கள் EPFO WhatsApp ஹெல்ப்லைன் எண் மூலம் அறிந்துக்கொள்ளலாம். எப்படி என்பது இங்கே காணுங்கள்!

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 2, 2020, 09:26 PM IST
EPF கணக்கின் அனைத்து தகவல்களும் Whatsapp மூலம் தெரிந்திக்கொள்ளலாம்; ஹெல்ப்லைன் எண் என்ன? title=

EPFO Whatsapp Helpline Service: உங்கள் EPFO கணக்கைப் பற்றிய விவரங்களை நீங்கள் தெரிந்துக்கொள்ள விரும்பினால், எந்தவித சிரமமும் இல்லாமல் எளிதாகத் தெரிந்துக்கொள்ளலாம். EPF உறுப்பினர்கள் தகவல்களை உடனடியாக அறிந்திக்கொள்ள வாட்ஸ்அப் (Whatsapp) ஹெல்ப்லைன் சேவையை (EPFO Whatsapp Helpline Service) ஈபிஎஃப்ஒ (EPFO) அறிமுகப்படுத்தியுள்ளது. தொழிலாளர் அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி, இந்த வசதி EPFO ​​இன் புகார்களை விரைந்து தீர்ப்பதற்கானது.

எகனாமிக் டைம்ஸ் செய்தியின்படி, ஈபிஎஃப்ஒவின் மற்ற சேவைகளான EPFiGMS போர்டல் (EPFO's online complaint Portal) மற்றும் CPGRAMS போர்டல் (Centralized Public Grievance Redress and Monitoring System) சமூக ஊடக தளமான முகநூல், ட்விட்டர் பக்கத்தில் புகார் தெரிவிக்கலாம். அதேபோல 24 மணி நேர கால் சென்டர் சேவை ஆகியவை அடங்கும்.

ALSO READ |  உங்கள் PF பணத்தை வேறொரு கணக்கிற்கு மாற்றுவது எப்படி?... இதோ வழிமுறைகள்!!

தொழிலாளர் அமைச்சின் கூற்றுப்படி, ஈபிஎஃப்ஒ உறுப்பினர்கள் தங்கள் கணக்கு குறித்து தகவல்களை எளிதாக பெரும் வகையில், வாட்ஸ்அப் அடிப்படையிலான ஹெல்ப்லைன்-கம்-புகார் சேவையைத் தொடங்கியுள்ளது. கோவிட் 19 தொற்றுநோய்களின் போது பங்குதாரர்களுக்கு சேவைகளை வழங்கும் நோக்கத்துடன் இந்த சேவை ஆரம்பிக்கப்பட்டு உள்ளது.

இந்த எண் எப்படி வேலை செய்கிறது? (How does work Whatsapp Helpline Service?)

இந்த முயற்சியால் PF பங்குதாரர்கள் EPFO பிராந்திய அலுவலகங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம். இப்போது EPFO ​​இன் அனைத்து 138 பிராந்திய அலுவலகங்களிலும் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. எந்தவொரு பி.எஃப் கணக்கையும் வைத்திருக்கும் எந்தவொரு தரப்பினரும் ஈ.பி.எஃப்.ஓ தொடர்பான சேவைகள் தொடர்பான எந்தவொரு புகாரையும் சம்பந்தப்பட்ட பிராந்திய அலுவலகத்தின் ஹெல்ப்லைன் எண்ணில் அல்லது வாட்ஸ்அப் செய்தி மூலம் பதிவு செய்யலாம்.

EPFO இன் பிராந்திய அலுவலகங்களின் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் எண்கள் EPFO ​​இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருக்கிறது. ஈபிஎஃப்ஒவின் இந்த ஹெல்ப்லைனின் நோக்கம் இடைத்தரகர்கள் இல்லாம்ல் நேரடியாக பங்குதாரர்கள் EPFO அலுவலகத்தை தொடர்புக்கொள்ளலாம். இதமூலம் புகார்களை உடனடியாக தீர்ப்படுவதை உறுதி செய்வதற்கும், வாட்ஸ்அப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கும், ஒவ்வொரு பிராந்திய அலுவலகத்திலும் ஒரு தனி நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

ALSO READ |  Gratuity எப்படி கணக்கிடுவது? இந்த பார்முலா உங்களுக்கு அதிக பணம் சம்பாதிக்க உதவும்

இந்த Whatsapp ஹெல்ப்லைன் அறிமுகப்படுத்தியவுடன் மிகவும் பிரபலமாகிவிட்டது. இதுவரை, வாட்ஸ்அப்பில் இருந்து 1,64,040 க்கும் மேற்பட்ட புகார்கள் மற்றும் கேள்விகளை ஈ.பி.எஃப்.ஓ தீர்த்து வைத்துள்ளது. வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் எண் வெளியான பிறகு, பேஸ்புக் / ட்விட்டர் போன்ற சமூக ஊடக ஊடகங்களில் வரும் 30 சதவீதம் புகார்கள் குறைந்துள்ளது. அதேபோல EPFiGMS மற்றும் CPGRAMS போர்ட்டலில் வரும் புகாரும் 16 சதவீதம் குறைந்துள்ளது. 

வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவையை எவ்வாறு பயன்படுத்துவது? (How to use WhatsApp helpline service):

உங்கள் ஈபிஎஃப் கணக்கு தொடர்பான புகாரை வாட்ஸ்அப் வழியாக தீர்க்க, நீங்கள் முதலில் உங்கள் கிளை அலுவலகத்தின் இருப்பிடத்தை அறிந்து கொள்ள வேண்டும். வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் வெவ்வேறு கிளை அலுவலகங்களுக்கு வெவ்வேறு எண்களை அமைந்துள்ளது. உதாரணமாக, உங்கள் பிராந்திய அலுவலகம் மத்திய டெல்லியில் இருந்தால், வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் எண் 8178457507 ஆகும். உங்கள் பிராந்திய அலுவலகம் தெற்கு டெல்லியில் அமைந்திருந்தால், வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் எண் 9717547174.

ALSO READ |  PF கணக்கிலிருந்து வெறும் 2 நிமிடங்களில் பணத்தை எடுக்கலாம்... இதை மட்டும் செய்யுங்க...

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News