X-ray கொடுத்த ஷாக்... பிறப்பில் தான் ஆண் என்பதை அறிந்த மணமான பெண் அதிர்ச்சி..!!
25 வயதான பெண் கடந்த ஒரு வருட காலமாக குழந்தை செல்வம் வேண்டும் என முயற்சி செய்து வந்த நிலையில், ஒரு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட காயமடைந்த கணுக்கால் எக்ஸ்ரே மூலம் உண்மையை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
ஒரு சீனப் பெண் தன் வாழ்க்கையின் மிகப்பெரிய அதிர்ச்சியை அடைந்தாள். எக்ஸ் ரே மூலம் உண்மையில் தான் ஒரு ஆணாகப் பிறந்தவள் என்ற அதிர்ச்சி தகவல் அவருக்கு இடியாய் இருந்தது
25 வயதான பெண் கடந்த ஒரு வருட காலமாக குழந்தை செல்வம் வேண்டும் என முயற்சி செய்து வந்த நிலையில், ஒரு மருத்துவமனையில் எடுக்கப்பட்ட காயமடைந்த கணுக்கால் எக்ஸ்ரே மூலம் உண்மையை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்
எக்ஸ்ரேயை பரிசோதித்தபோது, அவரது எலும்புகள் மூலம் இன்னும் பருவம் அடையவில்லை என்பதை மருத்துவர் கண்டுபிடித்தார். மேலும் அந்த பெண் மாதவிடாய் வரவேயில்லை என்பதும் தெரியவந்தது. இது குறித்து அவர் தர்மசங்கடமாக இருந்ததால், அவர் இது குறித்து யாரிடமும் கூறவில்லை என என்று அந்த பெண் கூறினார்.
“எனது சிறு வயதில் என் அம்மா என்னை மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். நான் மற்றவர்களை விட மெதுவாக வளர்கிறேன் என்று மருத்துவர் கூறினார், சில ஆண்டுகள் தாமதாக பருவம் அடையலாம், ”என்று உள்ளூர் மருத்துவர் கூறியதாக அந்த பெண் தெரிவித்தார்.
"நான் வளர்ந்த பிறகு, இந்த பிரச்சினையை தீவிரமாக கருதவில்லை," என்று அந்த பெண் மேலும் கூறினார்.
ALSO READ |அதிர்ச்சி தகவல்... வயிற்று வலியால் தான் ஆண் என்பதை உணர்ந்த மணமான பெண்..!!!
இது குறித்து மருத்துவமனை வெளியிட்ட ஒரு அறிக்கையில், மாதவிடாய் இல்லாத போதிலும், பின்பாக் என்ற பெயருடைய அவர் பெண் இல்லை என சந்தேகிக்க எந்த காரணமும் இல்லை, ஏனென்றால் அவருக்கு பெண் உறுப்பு இருந்தது என்று கூறப்பட்டுள்ளது
நானும் எனது கணவரும் ஒரு வருடமாக ஒரு குழந்தையைப் பெற முயற்சிக்கிறோம், ஆனால் குழந்தை பிறக்கவில்லை என அப்பெண் கூறினார்
பின்பாங்கிற்கு பிறவி அட்ரீனல் ஹைபர்பிளாசியா உள்ளது, ஏனெனில் அவர் உயர் இரத்த அழுத்தம் மற்றும் குறைந்த அளவில் இரத்த பொட்டாசியம் ஆகியவற்றால் அவதிப்பட்டார்,. இது பாலியல் வளர்ச்சிக் கோளாறுக்கு வழிவகுக்கும். இது இந்தநோயின் பொதுவான அறிகுறி என மருத்துவர்கள் கூறுகின்றனர்
அவரது பெற்றோர் நெருக்கமான உறவினர்கள் என்பதால் இந்த குறைபாடு ஏற்பட்டு இருக்கலாம் என்று மருத்துவர்கள் கூறினர்.
சுரப்பியல் நிபுணர், மருத்துவர் டோங் ஃபெங்க்கின் நடத்திய ஒரு மரபணு பரிசோதனையில் அவரது காரியோடைப் (karyotype) 46, எக்ஸ்ஒய் (XY) என்று தெரியவந்தது, இது பொதுவாக ஆண் அல்லது பெண் என தெளிவாக கூற இல்லாத பிறப்புறுப்பைக் கொண்ட ஆண்களில் பொதுவாகக் காணப்படுகிறது.
தனக்கு கருப்பை இல்லை என்றாலும், ஆண் பிறப்புறுப்பு அல்லது Adam’s apple கூட இல்லை என்பதை பிங்பிங் அறிந்து கொண்டார்.
டாக்டர்கள் இப்போது மனம் உடைந்து குழப்பத்தில் உள்ள பிங்பிங்கிற்கு உளவிய்ல் ரீதியாக ஆலோசனை வழங்கி வருகின்றனர்.
ALSO READ | கடல் பரப்பில் 'வானத்தில் மிதக்கும்' கப்பல்.. வைரலாகும் புகைப்படம்..!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR