கடல் பரப்பில் 'வானத்தில் மிதக்கும்' கப்பல்.. வைரலாகும் புகைப்படம்..!!

கார்ன்வால் கடற்கரையிலிருந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் கடலின் மேற்பரப்பிற்கு மேலே காற்றில் மிதக்கும் கப்பல் படமெடுக்கப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 13, 2021, 12:20 AM IST
  • கானல் நீர் எனும் அற்புதம் , இயற்கையாக நிகழும் ஒளியியல் மாயை.
  • கானல் நீர் என்ற சொல்லுக்கும் தண்ணீருக்கும் எந்த தொடர்பும் இல்லை.
  • ஒளிவிலகல் ஏற்பட்டு ஒரு மாயையான தோற்றம் கண்களுக்கும் தெரிகிறது
கடல் பரப்பில் 'வானத்தில் மிதக்கும்' கப்பல்.. வைரலாகும் புகைப்படம்..!! title=

கடல் பரப்பில் 'வானத்தில் மிதக்கும்' ஒரு கப்பலின் படம் மிகவும் வேகமாக இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 
கார்ன்வால் கடற்கரையிலிருந்து எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் கடலின் மேற்பரப்பிற்கு மேலே காற்றில் மிதக்கும் கப்பல் படமெடுக்கப்பட்டுள்ளது

ஆனால் கப்பல்  கடல் பரப்பில் மேல் தான் உள்ளது. 'கானல் நீர்' கோற்றம் என்று அழைக்கப்படும் ஒரு நிகழ்வின் காரணமாக மிதப்பது போல் தோன்றுகிறது இது மாயையான தோற்றத்திற்கு (optical illusion) ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.

டேவ் மெட்லாக் என்பவர் தனது நாய் அழைத்துக் கொண்டு வெளியே நடந்து கொண்டிருந்தபோது இந்த  வினோதமான தோற்றத்தைக் கண்டார். மெட்லாக் "மார்ச் 7, ஞாயிற்றுக்கிழமை, நான் என் நாயை அழைத்துக் கொண்டு கடற்கரையில் நடந்து கொண்டிருந்தபோது இந்த படம் எடுத்தேன்" என்று கூறினார்,

ALSO READ | கணவர் Like செய்த பெண்களின் படங்களை பிரிண்ட் செய்து பரிசாக வழங்கிய மனைவி!

 

கானல் நீர் எனும் அற்புதம் , இயற்கையாக நிகழும் ஒளியியல் மாயை. கானல் நீர் என்ற சொல்லுக்கும் தண்ணீருக்கும் எந்த தொடர்பும் இல்லை. மேற்பரப்பு மிகவும் சூடாகவும், காற்று குளிர்ச்சியாகவும் இருக்கும்போது இது போன்ற தோற்ற அதிசயங்கள் நிகழ்கின்றன.  ஒளி குளிர்ந்த காற்று வழியாகவும், சூடான காற்றின் அடுக்கு வழியாகவும் செல்லும் போது ஒளிவிலகல்  ஏற்பட்டு ஒரு மாயையான தோற்றம் கண்களுக்கும் தெரிகிறது.

ALSO READ | என்னுடைய கர்ப்பத்திற்கு காற்று தான் காரணம்; கர்ப்பமான 15 நிமிடத்தில் பிறந்த குழந்தை!!

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News